உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வெல்வதற்கேவிழுந்தவைகள் எல்லாம்வீணாகி விடுவதில்லைவீசி எறிந்த விதைகள் தான்இங்கு விருட்சமாகவிண்ணை முட்டி நிற்கிறது!துாக்கி எறியப்பட்டதுதுடைப்பம் தான்...எனினும்எவ்வளவு துாசிகளைதுவம்சம் செய்தது என்றுஎண்ணி பார்க்கும் இதயம்எத்தனை இருக்கிறது!முச்சந்தியில் கிடக்கும்முனை ஒடிந்த பேனாஎத்தனை இதிகாசங்களைஎழுதியது என்றுஎவருக்கு தெரியும்!விருந்தாளியின் பசியை போக்கிவீதியில் வந்து விழும்வாழை இலை தான்வாழும் பசுக்களுக்கு இரையாகிஇன்னுயிர் விடுகிறது!விழுந்து, வெடித்து மரணித்தமழைத் துளிகளின் மகிமையில் தான்உலகம் தன் வதனத்தைஅலங்கரித்துக் கொள்கிறது!விரல் பிடித்து நடக்கவிழுந்து எழும் குழந்தைகள் தான்விண்ணை சுற்றி வரும்விமானத்திற்கு விழிகளாகிறது!உயிர் துறந்து, உதிர்ந்து விழுந்தசருகுகள் தான்உலகம் உயர்த்தும் விளை நிலத்திற்குவளம் சேர்க்கிறது!இங்குஉதிர்ந்தவைகளும்உயிர் துறந்தவைகளும்வீழ்வதற்கு மட்டுமல்லஇன்னொரு ஜென்மத்தைவெல்வதற்கும் தான்!— க.அழகர்சாமி, கொச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !