உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

காலம் மாறிப்போச்சு!ஒற்றை ஊதியத்தில்ஒன்பது பிள்ளைகள்ஒற்றுமையாய் வாழ்ந்ததுஅந்தக் காலம்!ஒற்றைப் பிள்ளைக்குஇருவர் ஊதியம்பற்றாக்குறையானதுஇந்தக் காலம்!வாசல், நடை, கூடம், முற்றம்வாழும் வீட்டின் அடையாளம்நேசமுடன் கூடி மகிழ்ந்ததுஅந்தக் காலம்!ஒன்று, இரண்டு, மூன்று எனபடுக்கையறையே குறியீடாய்அடிமைப்படுத்திடும் அந்நிய பண்பாடுஇந்தக் காலம்!பாய் விரித்துப் படுத்துகளைப்புடன்வாய் திறந்து துாங்கியதுஅந்தக் காலம்!வராத துாக்கத்தை வரவழைக்கமருந்து, மாத்திரை தேடுவதுஇந்தக் காலம்!ஒழுக்கமுடன் பண்பும் கலந்துஎழுத்தறிவித்த கோவில்களாய்பழுதில்லா கல்விச் சாலைகள் இருந்ததுஅந்தக் காலம்!கற்றை கற்றையாய் வசூலித்துஎழுத்தையும், அறிவையும் விற்கும்கேவலமான கல்விச் சந்தைகள்இந்தக் காலம்!காசு, பணம் வேண்டிமாசிலா மனதுடன், பக்தர்கள்ஆலயத்தில் ஈசனைத் தொழுததுஅந்தக் காலம்!காசு, பணம் இருந்தால் தான்கடவுளே தரிசனம் தருவார்ஆண்டவனும் விலை போன அதிசயம்இந்தக் காலம்!கர்ம வீரராய், கறை படாதகைகளுடன், நேர்மையாய் வாழ்ந்தஆட்சியாளர்...தர்ம நெறியுடன்இருந்த அரசியல்வாதிகள்அந்தக் காலம்!மக்கள் நலனை சற்றும் சிந்தியாமல்எக்கணமும் தன்னலமே குறிக்கோளாய்வக்கணையாய் வாய் பேசும் தலைவர்கள்இந்தக் காலம்!— மீனாட்சி பட்டாபிராமன், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !