கவிதைச்சோலை!
அறிவியல்....அருமையாகஅழகாக இருக்கின்றனவளர்ந்த மேலை நாடுகள்!சுத்தம், சுகாதாரம்சட்ட திட்டம்நிர்வாகம், ஒழுங்குநாகரிகம், பண்பாடு...குழந்தை வளர்ப்புமனித நேயம்மருத்துவம்அறிவியல் வளர்ச்சி...கல்வி, வேலை வாய்ப்புநவீன வேளாண்மைஅனைத்தும்ஆச்சரியப்பட வைக்கின்றன!குப்பை கூளங்கள்கிடையாது...சாலைகளில் விதிமீறல்கள்இல்லை!மின் தடை கிடையாதுஉணவு, தண்ணீர் பஞ்சம்எதுவும் இல்லை!கட்டுப்பாடில்லா சுதந்திரம்... ஆடல், பாடல்ஆண் - பெண் பேதம்அறவே கிடையாது!இத்தனை இருந்தும்ஏன் திரும்பி வந்தீர்கள்என்று கேட்கின்றனர்நண்பர்கள்!எப்படி சொல்வது...அங்கு, பயந்து பயந்துவாழ வேண்டியதை...குழந்தைகள் கூடதுப்பாக்கி பிடிக்கின்றனரே!— சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.