உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

பூக்கும் நீரூற்று!மணலை அள்ளி ஆற்றைமலடாக்கி விட்டோம்...மலடான ஆறுகளில்பூப்பதில்லைமருந்துக்குக் கூடசிறு புல் பூண்டுகள்!இப்போது கிணறள்ளிநீர் உறிஞ்சும்கீழ்நிலையைசெய்து வருகிறோம்!கிணறுகளும் ஒருநாள்கிழட்டுத்தன்மைஅடையக்கூடும்!அப்போது, குடிநீருக்காய்அறுத்துக்கொள்வோமாஅவரவர் குரல்வளையைநிலம் சுரண்டி, காடு திருடிகாணாது தொலைத்து விட்டோம்பல கானாறுகளையும்நிலத்தடி நீரையும்!இனி... கடலள்ளிமேகம் கருணை காட்டும்நீரையாவதுகவனித்து சேமிப்போம்!குளிரும் பூமிவேரொடி பூக்கும்ஆயிரமாயிரம் நீரூற்றுகளை!அந்த நீரூற்றில்முகம் நனைத்துவிளையாடும்நம் அடுத்தடுத்தசந்ததிகள்! — இ.எஸ்.லலிதாமதி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !