உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

மனம் மலரட்டும்!முள்ளாகவே இருந்தாலும்முன்னேறு உன் பாதையில்முதலடி மட்டுமே வலிக்கும்!மூடியதே வாசல் எனமூச்சடைத்துப் போகாதேமுயன்றால் முன் விரியும்மற்றுமொரு வாசல்!தோல்வியே தொடர்ந்தாலும்துாசியாய் தகர்த்தெறிதுகளிலும் தெரியலாம்புது ஒளியின் துளி!துன்பமே வந்தாலும்துவளாமல் நிமிர்ந்து விடுதுணிந்தால் தொட்டு விடலாம்வெற்றியின் நுனி!சிதறும் மழை தான்மண்ணுக்கு வளம் சேர்க்கும்சிறு புல்லும் பெரும்புயலைவளைந்து தாங்கும்!சிதறாத மனம் தான்சிகரம் கொண்டு சேர்க்கும்!நல்ல எண்ணங்களைநாற்றாய் நட்டு நீராய்நம்பிக்கையை ஊற்று!நாளும் நல்ல விடியல் எனும்நல்லெண்ண உரமிடுநறுமலர் தோட்டமாய் மனம்மலர, நுகர்ந்து மகிழ்ந்திடு!அன்னை போல அன்பு செய்அழகாய் விரியும் சிறகுதேவையின்றி, ஆனந்தமாய் மனம் பறப்பதை பார்!காந்திமதி சுப்ரமணியன், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !