உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

நேற்றும், இன்றும், நாளையும்!கொடிய விஷமுள்ளபாம்புக்குநல்ல பாம்புஎன்று பெயர்...ஒன்றாகவே விஷம் குடித்துஉயிரை விட்டாலும்கள்ளக் காதல்என்பர்...நேர்மையற்ற கணக்குகளை எல்லாம்காந்தி கணக்கு எனசொல்வதுண்டு...சாகசம் செய்யும்கலைஞர்களைகூசாமல், 'டூப்' என்றுபெயரிடுவர்...இரக்கமின்றி லட்சங்கள்வாங்கும் கல்வியாளர்களைகல்வி வள்ளல் எனவணங்குவர்...பணத்தாசை இல்லாமல்கடமையை செய்பவரைபிழைக்கத் தெரியாதவன்என்பர்...திரையில் நல்லவராகவேநடிப்பவர்களைநல்லவராகவேநினைப்பர்...முரண்பாடுகளின்மொத்த உருவமேமனிதர்கள் தான்...நேற்றும், இன்றும், நாளையும்!சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !