கவிதைச்சோலை!
கயவர்கள் என்று தெரிந்தும்...ஓட்டு திருடர்களேசீக்கிரம் வாருங்கள்எங்கள் ஓட்டு விற்பனைக்குகாத்துக் கிடக்கிறது!காத்துக் கிடக்கிறோம்காத்துக் கிடக்கிறோம்திருடர்கள் எப்போதுகதவை தட்டுவர் என்ற ஏக்கத்தில்!முன்பு திருடர்களுக்கு பயந்துகதவை மூடுவோம்...இன்றுதிருடர்கள் வருகைக்காககாத்துக் கிடக்கிறோம்!தெரியாமல் வரும் திருடனைஅடித்து விரட்டுகிறோம்...தெரிந்தே வரும் திருடனுக்குஆரத்தி எடுக்கிறோம்!ஐந்து நாள் பணத்திற்கு ஆசைப்பட்டுஐந்து ஆண்டு நாட்டைஅடகு வைக்க காத்து கிடக்கிறோம்!வழி விடுங்கள் வழி விடுங்கள்காவலரின் துணையோடுகயவர்கள் வருகின்றனர் வழி விடுங்கள்!கயவர்கள் என்று தெரிந்தும்கதவை திறந்து விடதேர்தல் வந்தாச்சு!மை.சுந்தரமூர்த்தி, புதுச்சேரி.