கவிதைச்சோலை!
ஒளியும், ஒலியும்....அடுத்தவர் நலன்பேணாதபேனருக்கு வைத்திட்டோம்புஸ்வானம்!கைநாட்டும் ஒரு கவுரவம்;கையூட்டு, 'நீட்' தேர்வுக்குகைகூப்பி கும்பிடு போட்டு விட்டுகொளுத்திட்டோம்பென்சில் மத்தாப்பு!கசக்கிப் பிழிந்த, 'கஜா' புயலைபோர்க்கால அடிப்படையில்கண் காணாமல் ஓட வைத்திட்டுகளிப்புற்றோம்கண்ணிவெடி வெடித்து!ஜனங்களோடு ஜனங்களாகசந்தோஷமாகசாலை பணியாளர்களும்...துள்ளலுடன்தரணியின் தர உயர்வுக்கு உழைத்ததிருப்தியில் திளைத்ததுப்புரவு தொழிலாளர்களும்...விகற்பமில்லாமல்வெற்றி முகமாய்விவசாய பெருமக்களும்!ஒரு கோடிசர வெடிகளால்ஒலியும் ஒளியும் நிரப்பிபிரகாசமாக வந்து விட்டதால்கொண்டாடி தீர்க்கலாம்இனி எப்போதும்தீபாவளியை!சு. பிரபாகர், தேவகோட்டை.