கவிதைச்சோலை!
அன்பை வளர்ப்போம்!விட்டில் பூச்சிக்கு தெரியாதுநெருப்பில் இறப்போமென்று!மீனுக்கு புரியாதுதுாண்டிலில் தன் உயிர் பிரியுமென்று!பூக்களுக்கு தெரியாதுஉதிர்ந்து விழுவோமென்று!நிலவுக்கு தெரியாதுதேய்ந்து வளர்கிறோமென்று!மெழுகுவர்த்திக்கு தெரியாதுஉருகி விடுவோமென்று!உளிக்கு தெரியாதுகல்லை காயப்படுத்துகிறோமென்று!குயிலுக்கு தெரியாதுதான் பாடும் பாட்டு இனிமையென்று!மனிதா...உன் நாக்குக்கு தெரியாதுஅடுத்தவனின் இதயம் ரணமாகுமென்று!இனிமையாக பேசி அன்பை வளர்த்தால்பகைவன் கூட நண்பனாவான்!த. நேரு, வெண்கரும்பூர்.