உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

எப்படி... எப்படி...உயரங்களைக் கண்டுமலைத்து நின்றால்சிகரங்களில் ஏறிசாதிப்பது எப்படி?தொலைவுகளைக் கண்டுமிரண்டு போனால்பயணங்களை அனுபவித்துமகிழ்வது எப்படி?ஆழங்களைக் கண்டுஅச்சம் கொண்டால்நீச்சல் கற்றுபூரிப்பது எப்படி?வேகங்களைக் கண்டுநடுக்கம் வந்தால்பொன் போன்ற நேரத்தைசேமிப்பது எப்படி?தடைகளைக் கண்டுதயக்கம் காட்டினால்முன்னேறிச் சென்றுவெல்வது எப்படி?அவமானங்களைக் கண்டுஅடங்கிக் கிடந்தால்திறமைக்கு வெகுமதிகள்பெறுவது எப்படி?துயரங்களைக் கண்டுமுடங்கி அழுதால்சிறப்பான வாழ்வைஅடைவது எப்படி?தோல்விகளைக் கண்டுதுவண்டு சரிந்தால்அழியாத புகழைஈட்டுவது எப்படி?எஸ். கண்ணன், தஞ்சாவூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !