கவிதைச்சோலை!
வெற்றியின் விலாசம்!இளைஞனே... நீ சந்திக்கும்தோல்வி படிக்கட்டைதொட்டு வணங்கிடுவெற்றியின் விலாசம் - உன்னைதொற்றிக் கொள்ளும்!நீ அடைந்த அவமானங்கள்அத்தனையும் நினைவில் வைமொத்தமாய் வெகுமானமாகிமுத்தமிட்டு அணைக்கும்!சோம்பலை தீயிட்டுசாம்பலாக்குபுத்துணர்ச்சி உள்ளத்தில்பூத்துச் சிரிக்கும்!முடியாது என்பதைஅடியோடு மறந்து விடு...முடியும் என்பதுஉன் முன் மண்டியிடும்!துாக்கத்தில் வரும் கனவுகளைதுாரத்தில் கைவிடு...ஊக்கத்தில் வரும் நனவுகளைஉடனே துவங்கி விடு!எதிரிகளைபுன்னகையால் ஒதுக்கி விடுநண்பர்களைஇரு கைகளால் குலுக்கி விடு!தடம் மாறும் எண்ணத்தைஉடனே தடுத்து நிறுத்து - ஒருநாள்புடம் போட்ட தங்கத் தேரில்வடம் போட்டு கூடி இழுப்பர்!வாழும்போதுவறட்டு கவுரவத்தைவிட்டு விடு - போகும்போது'வாழ்ந்த மனிதன்' என்ற பெயரைபெற்று விடு!தமிழருவி, திருவிடைமருதுார்.