கவிதைச்சோலை!
வேண்டும் விடுதலை!அந்நிய அரசிடமிருந்து விடுதலை பெற்றது அப்போதுஅறியாமை இருளிலிருந்து விடுதலைப் பெறுவது எப்போது?தீவிரவாதம் இல்லாத பாரதம் வேண்டும்மதவாதம் செய்யாத மானிடர் வேண்டும்அடிமை இல்லாத கிராமம் வேண்டும்அநீதி இல்லாத நகரம் வேண்டும்!வன்முறை இல்லாத சமுதாயம் வேண்டும்வறுமை இல்லாத தேசம் வேண்டும்பெண் வதை செய்யாத ஆடவர் வேண்டும்பெருமை சேர்க்கும் வீரர்கள் வேண்டும்!உழவு நலியாத கிராமம் வேண்டும்ஊழல் இல்லாத அரசாங்கம் வேண்டும்தன்னலம் கருதாத தலைவர்கள் வேண்டும்துரோகம் இழைக்காத ராணுவம் வேண்டும்!கடமையாற்றும் காவல் துறை வேண்டும்கண்ணியம் காக்கும் இதயங்கள் வேண்டும்கனிவாய் கற்பிக்கும் ஆசான் வேண்டும்பணிவாய் கற்கும் மாணவன் வேண்டும்!மதுவின் தீமையை உணர வேண்டும்மதிநுட்பம் பெருகிட நுாலகம் வேண்டும்கல்லாமை முற்றிலும் அகல வேண்டும்அப்துல்கலாமை போன்று எளிமை வேண்டும்!இயற்கையை அழிக்காத இதயங்கள் வேண்டும்இறைவனை வணங்கும் மழலைகள் வேண்டும்காந்திஜியின் அகிம்சையை பேண வேண்டும்காமராஜரின் நேர்மையை அணிய வேண்டும்!பார் முழுதும் மூவர்ணக்கொடி பறந்திட வேண்டும்பாரதத்தின் புகழ் தரணியில் ஓங்கிட வேண்டும்வேண்டும் வேண்டும் விடுதலை இந்தியாஆகணும் ஆகணும் ஆரோக்கிய இந்தியா!ச. புனிதா, சென்னை