உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

சாத்தியமில்லை!சூழ்ச்சிகள் பெருகிஅனைத்தும் வீழ்ச்சிகாணும் இடத்தில் வளர்ச்சிக்கு சாத்தியமில்லை!வஞ்சகம் குவிந்திருக்கும்வறண்ட நெஞ்சத்தில்இரக்க உணர்வு சுரக்கசாத்தியமில்லை!சுயநலத்தை விரட்டிபொதுநலன் வளர்க்கும்புனிதமான இடத்தில்சுரண்டல் அரங்கேறசாத்தியமில்லை!பிடிவாதம் மிகுந்திருக்கும்முரட்டுத்தன வாழ்க்கைக்குள்சமாதானத்தை எதிர்பார்ப்பதுசாத்தியமில்லை!கீழ்படிதல் இன்றிகவுரவம் தேடும்கல்நெஞ்ச இதயத்தில்கண்ணியத்தை பார்க்கசாத்தியமில்லை!பிரதிபலன் எதிர்பார்த்துஉதவி கிடைக்கும் இடத்தில்நாணயத்தை எதிர்நோக்குவதுசாத்தியமில்லை!வேற்றுமைகளை களைந்துவெளிப்படையாக பேசும்திறந்தவெளி மனதில்ஒளிவு மறைவு இருக்கசாத்தியமில்லை!குரோதம் நிரம்பிய குறுகிய இதயத்தில்மனித நேயத்தைவளர்க்காத வரைபாசமும், நேசமும் மலரசாத்தியமே இல்லை!எல்.மூர்த்தி, கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !