உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

எங்கே தொலைத்தோம்... எங்கே தேடுகிறோம்?என்ன தொலைத்தோம்எங்கே தொலைத்தோம்என்றறியாமலே எதையோஎங்கேயோ தேடுகிறோம்கூட்டுக் குடும்பத்தில்குண்டு வைத்துவிட்டுஒற்றுமையை தேடுகிறோம்பாட்டன் - பாட்டியை ஏன்தந்தை - தாயைமுதியோர் இல்லத்திற்குவழியனுப்பி வைத்துவிட்டுஉறவுகளை தேடுகிறோம்சிறு தானிய உணவை மறந்தோம்மண் சட்டி மறைந்து போனதுநாகரிக உணவு உண்டுஆரோக்கியத்தை இழந்தோம்இழந்ததை மிக்க செலவுடன்மருத்துவமனையில் தேடுகிறோம்!ஆண் - பெண் உடையிலிருந்தகம்பீரம், நளினம் களவு போனதுபுதுமையென பொருந்தாத உடைகளில்புதுமையாய் காட்சிப் பொருளாய்கண்ணியம் இழந்தோம்!கடவுள் வழிபாடுபெற்றோருக்கு மரியாதைமற்றவர்களையும் மதிக்கும்நற்பண்புகளை சந்ததியினருக்குகற்றுத்தர மறந்தோம் - நாமும்கற்றுக்கொள்ள மறந்தோம்!ஆணுக்கு நிகரென பெண்களும்பணிகளில் சேர்ந்தனர் - நாளும்பொருளீட்டி உடல் சோர்ந்தனர்கணவன், குழந்தையின் அன்பைவீட்டில் இழந்ததை வெளியில் தேடினர்!கல்வியில் நேர்மை நீதிபோதனைதர்ம வாழ்வியல் முறைகளில் சுயத்தை தொலைத்துவிட்டுஇருக்குமிடம் அறியாமல் தேடுகிறோம்தொலைத்துவிட்ட பொக்கிஷங்களைதேடுவோம் அறிவுக்கு எட்டிய வரை!ஆ. மாணிக்கம், பொள்ளாச்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !