உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

ஒரு துளி அமுதம்!ஆசைஒரு ஆபத்தான மிருகம்அதனிடம் அகப்பட்டவர்கள் கதிஅதோகதி தான்!ஆசை ஒருவிசித்திர அமுதம்உண்டவர்களையும் சாக விடாது...தானும் எளிதில் சாகாது!நிறங்கள்இன்னதென்றுநிர்ணயித்து விடலாம்! ஆசையை ஒருபோதும்அளவிட முடியாது!பார்க்கச் சிறியதாய்பம்மியபடி இருந்தாலும்வாய்ப்புக் கொடுத்தால்வானுயர வளர்ந்து விடும்!ஆசைதேவைத்தோல் போர்த்திய புலிதேவையின் தேகம்அது குடியிருக்கும் கூடு!தித்திப்பால் வளர்கிறசர்க்கரை வியாதிமருந்துகளுக்கு அதுமட்டுப்படுவதில்லைநம்மைகடனாளியாக்க காத்திருக்கும்கந்துவட்டிக்காரன்!ஆசையெனும் மேனகைஆட வேண்டியதே இல்லைமுனிவர்கள் தான் இதனிடம்ஆடிப்போய் விடுகின்றனர்!இதைகருவறுக்கும் களிம்பைஉள் மனம் ஒளித்து வைத்திருக்கிறதுபோதும் என்பதேஆசையை அழிக்கும் மருந்துஅது காலாவதியாகும் முன்ஆசை மேல் தெளித்து அழித்துஅல்லலில்லாமல்அமைதியாய் வாழலாம்!வ. ராதா கிருஷ்ணன், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !