உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

புது மொழி!குறை, நிறைகளை ஏற்றுவாழப் பழகுவதேமனித பிறவிக்கு உத்தமம்!முழுமையான வாழ்வுஞானிகளுக்குமட்டுமே சாத்தியம்!குறைகளுடன் வாழும்பிறரைப் பார்நம் குறைகள்சிறியதாய் தோன்றும்!வறுமையில் வாடும்ஏழையைப் பார்உன் வாழ்வுவசதியாய் தோன்றும்!துன்பத்தில் பிறர் விடும்கண்ணீரைப் பார்நீ படும் அல்லல்அளவாய் தோன்றும்!தைரியமும், கோழைத்தனமும்தன்னம்பிக்கையும், மனச்சோர்வும்நிம்மதியும், உளைச்சலும்சின்ன நுாலிழைகளாய்நம் வாழ்வில்பின்னிப் பிணைந்திருக்கிறது!நுாலிழைகளை இரும்புசங்கிலியாய் மாறஇடம் தராதே!துணிந்துவிடுநுாலிழைச் சிறையைஅறுத்து வெளியேற!முழுமையான வாழ்வுமனிதனுக்கும் சாத்தியம்எனும் புதுமொழிஉன்னிடத்திலிருந்துஆரம்பமாகட்டும்!மு. கண்ணன், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !