உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - அறிந்துகொள்!

விதைக்குள்விருட்சம் இருக்கும்மகத்துவத்தைமண் அறிந்து கொள்கிறது!பாறைக்குள்சிலை இருக்கும்அற்புதத்தைஉளி அறிந்து கொள்கிறது!மேகத்திற்குள்மழை இருக்கும்ஆச்சரியத்தைவானம் அறிந்து கொள்கிறது!வண்ணத்திற்குள்ஓவியம் இருக்கும்அழகை துாரிகைஅறிந்து கொள்கிறது!மழைத் துளியேமுத்தாகும் அதிசயத்தைசிப்பி அறிந்து கொள்கிறது!சிறு பிறையேபவுர்ணமியாகவளர்ச்சியடைவதைஇரவு அறிந்து கொள்கிறது!கட்டித் தங்கத்திற்குள்ஆபரணம் மறைந்திருப்பதைநெருப்பு அறிந்து கொள்கிறது!தோல்விக்குள் தான்வெற்றியின் முகவரிஇருப்பது புரியாமல்மானிடா நீ புலம்புகிறாய்!உலகம் திறந்திருக்கும்புதையல் நீ கண்களை மூடிக்கொண்டு ஒன்றுமில்லைஎன்று வருந்துகிறாய்!முத்து மிதந்து வராதுமூழ்கி தான் எடுக்க வேண்டும்!முயற்சி செய்பவனுக்கேஇமயமும் படி கல்லாகும்வானமும் அவன் கையில்வசப்படும்!— கு. வைரச்சந்திரன், திருச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !