உள்ளூர் செய்திகள்

கவிதைசோலை!

மனித மனம்!இதயம்இமயத்தை விட உயரமானது!இந்து மகா சமுத்திரத்தை விடஆழமானது...உலக அதியங்களை விடஅற்புதமானது!மனித இதயங்கள்இருக்கும் இடங்களால்வேறுபட்டாலும்இயக்கங்களால்ஒன்றுபடுகின்றன!ஒருவரின் இதயத்தில்இடம் பிடித்தவர்மற்றவருக்கு பிடிப்பதில்லை!பாசம்சில வேளைகளில்வேஷங்களாய்பரிணமிக்கும் போதும்மோசமெனமுட்டித் தள்ளிவிடாமல்கருணை கலந்துமீண்டும் இதயம்நேசக்கரம் நீட்டும்!ஏங்கியழும் குழந்தையைஎங்கேனும் கண்டால்ஏனென்றுஅழும் காரணத்தைஇதயம்கேட்கும்!சொந்தபந்தங்களால்பந்தாடப்படும் போதுஇதயம்துவண்டு விடுவதில்லை...எதிர்நீச்சலடித்துஎன்றும்தன் இருப்பைதக்க வைத்துக் கொள்கிறது!ஒருவரை திட்டித்தீர்ப்பதிலோகுறைகளைக் கொட்டித்தீர்ப்பதிலோமனம் சாந்தப்படுவதில்லை!ஒருவருக்கொருவர்விட்டுக் கொடுப்பதால்மட்டுமேமனித மனம்வெற்றி கொள்கிறது!மனித மனங்கள் ஒவ்வொன்றும்புனிதமானது என்பதைஒவ்வொருவரின் மனமும்மனதாரஉணர்ந்துகொள்ளும் போதுஇப்பூவுலகம் அனைத்தும்பொன்னுலகமாய்நிறம் மாறும்!— ஜோதிபாரதி, தேனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !