ராவண பகாடி குகை கோவில்கள்!
தெலுங்கானா மாநில தலைநகரான, ஐதராபாத்தில் இருந்து, 140 கி.மீ., தொலைவில் இருக்கிறது, ஐகோலே மலை பகுதி. இங்கு, 6ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஏராளமான கோவில்களை காணலாம். மலைகளை குடைந்து கட்டப்பட்ட கோவில்களும் உண்டு. இது, ராவண பகாடி என்று அழைக்கப்படுகிறது. இங்கு, இந்து, ஜைன, புத்த மத கோவில்களும் இருப்பது வியப்பாக இருக்கிறது. துர்கா கோவில், நம் பார்லிமென்ட் கட்டடம் போல, வட்ட வடிவில் இருக்கிறது.— ஜோல்னாபையன்.