உள்ளூர் செய்திகள்

ரத்தாகிறது சவ்படி சம்பிரதாயம்!

நேபாளத்தில், மாதவிலக்கு காலத்தில், பெண்களை, வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள குடிசையில், தனிமையில் தங்க வைக்கும் சம்பிரதாயம் உள்ளது. இதற்கு, சவ்படி என்று பெயர். இப்படி தங்கும் பெண்களை, நோய்கள் மற்றும் மிருகங்கள் தாக்குவதும், சில சமயம் கயவர்கள் பதம் பார்ப்பதும் உண்டு.சமீபத்தில், நேபாளத்தில் உள்ள தைலேக் மாவட்டத்தில், துளசி ஷாகீ என்ற, 19 வயது பெண், சவ்படி குடிசையில், தனியாக தங்கியிருந்த போது, பாம்பு கடித்து, உயிரிழந்தார். இச்சம்பவம், பெண்களை கொதிக்க வைத்தது. இதனால், இச்சம்பிரதாயத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி, போராட்டத்தில் குதித்தனர். இதை அடுத்து, சவ்படி சம்பிரதாயத்திற்கு தடை விதித்து, சட்டம் இயற்றி, 'மீறினால் மூன்று மாத சிறையும், மூவாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்...' என்று எச்சரித்துள்ளது, அரசு.—ஜோல்னா பையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !