உள்ளூர் செய்திகள்

மணிப்பூரை ஆக்ரமிக்கும் கொரிய கலாசாரம்!

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, மணிப்பூரில், கடந்த, 2000 ஆண்டில் இருந்தே இந்தி படங்கள் வெளியாவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியில் பேசுவற்கும் தடை உள்ளது. இந்தி திரைப்படங்களில் தங்களை தரக்குறைவாக சித்தரிப்பதால், அந்த படங்களை திரையிடக் கூடாதென, அங்கு செயல்படும் தீவிரவாத அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளதே இதற்கு காரணம்.இதனால், மணிப்பூரில், கொரிய படங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால், மெல்ல மெல்ல கொரிய கலாசாரம், அங்கு ஊடுருவி, ஆண்களும், பெண்களும், கொரிய கலாசாரத்துக்கு மாறி வருகின்றனர். கொரிய,'டிவி' சேனல்களுக்கு, கொரியாவை விட, மணிப்பூரில் மிகப் பெரிய மவுசு உள்ளது. கொரிய மொழியை கற்றுக் கொடுப்பதற்கான பயிற்சி வகுப்புகள் புற்றீசல் போல் முளைத்து வருகின்றன. இந்திய மாநிலமான மணிப்பூர், கொரியாவாக மாறி வருவதை, மத்திய, மாநில அரசுகள், வேடிக்கை பார்க்கின்றன என்பது தான், வேதனையான விஷயம்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !