உள்ளூர் செய்திகள்

வெற்றி காரணிகள்!

கவிதைச்சோலை!* என்னை தயவு கூர்ந்துஅவமானப்படுத்துங்கள்...என் வெற்றி நாள்எல்லாருக்கும்உவமையாகட்டும்!* என்னை புறந்தள்ளிபேசுங்கள்...அப்போது தான்நான் உங்கள் அகத்தில்நிரந்தர இடம் பிடிப்பேன்!* என்னை அலட்சியப்படுத்துங்கள்...அன்று முதல் நான்லட்சியவாதிகளின்முன் மாதிரியாவேன்!* என்னை இழிவு படுத்துங்கள்...அது என்னைவலிமையுள்ளவனாக்கட்டும்!* என்னை கேவலப்படுத்துங்கள்...அது என் வாழ்வைவளமாக்கப் பயன்படட்டும்!* என் தோல்வியைஎள்ளி நகையாடுங்கள்...அப்போது தான்அதைவிட பலமானகைத்தட்டல்களைஉங்களிடமிருந்துபெற முடியும்!* சரித்திரம் படைத்தவர்கள்சாதிப்பதற்கு முன்சந்தித்தவை தான் இவை!* எவ்வளவு துயரங்களும்கஷ்டங்களும் இடர்பாடுகளும்இடை வருகிறதோஅவ்வளவும்வெற்றிக்கான ஆற்றலைதிகரிக்கும் உந்து சக்திகள்!* ஆகவே என் மதிப்புக்குரியோரே...என்னை திட்டுங்கள்நான் திறம்படவே!— ந.ஏகம்பவாணன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !