டால்பினுடன் நீச்சலடிக்க தடை!
ஹவாய் தீவுக்கு வரும் சுற்றுலா பயணிகள், டால்பின் மீன்களுடன் இணைந்து, நீச்சல் அடிப்பது வழக்கம். மேலும், அதன்மீது ஏறி அமர்ந்து தண்ணீரில் மூழ்கி, ரசிக்கின்றனர். அதனால், 'இது மிருக வதையாகும். எனவே, இதை தடை செய்ய வேண்டும்...' என்று அரசு முடிவு செய்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் வருத்தத்தில் உள்ளனர்.— ஜோல்னாபையன்.