ஆசிரியரின் மந்திரம்!
கல்லூரியில், பேராசிரியராக பணியாற்றுகிறாள் என் தோழி. அவளது வகுப்புகளை, மாணவியர் ஆர்வமாக எதிர்பார்ப்பதை அறிந்து, அதற்கான காரணத்தை ஒரு மாணவியிடம் கேட்ட போது, 'தினமும் வகுப்பிற்கு வந்ததும், அன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை எங்களுக்கு தெரிந்தால் சொல்ல சொல்வார்; இல்லையேல், தானே சொல்வார். அன்றாட உதாரணங்களுடன் பாடத்தை நடத்துவதால், வகுப்பு சுவாரசியமாக இருக்கும்...' என்றாள். மற்ற ஆசிரியர்களும் இதை பின் பற்றினால், மாணவர்களுக்கு நாளிதழ் மற்றும் தினசரி காலண்டர்களை படிக்கும் பழக்கம் ஏற்படும். செய்வரா!— ரெங்கஸ்வாமி, சென்னை.