உள்ளூர் செய்திகள்

சோதனை மேல் சோதனை!

பிரிட்டன் ராணி எலிசபெத்துக்கு, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து கலங்க வைக்கிறார், அவரது இளைய பேரன். ஹாரியின் மனைவி, மேஹன் மார்கல், 'அரச குடும்ப வாழ்க்கையே வேண்டாம். அமைதியான வாழ்க்கையே போதும்...' என்றதால், சமீபத்தில் ஓட்டம் பிடித்தனர், ஹாரியும், மேஹனும். இந்த அதிர்ச்சியிலிருந்து அரச குடும்பம் மீள்வதற்குள், அடுத்த அணு குண்டை வீசியுள்ளார், மேஹன். சமீபகாலமாக, அமெரிக்காவில், கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் மீது, கொடூரமான தாக்குதல்கள் நடக்கின்றன. இதை கண்டித்து, அமெரிக்கா மட்டுமல்லாமல், ஐரோப்பிய நாடுகளிலும் போராட்டங்கள் நடக்கின்றன.'இந்த நவீன காலத்திலும், இனவெறி நடப்பதை சகிக்க முடியவில்லை. அமெரிக்காவுக்கு சென்று, கறுப்பின மக்களுடன் சேர்ந்து, வீதியில் அமர்ந்து போராடப் போகிறேன்...' என்கிறார், மேஹன். ராணி எலிசபெத்தோ, 'அரச குடும்பத்துக்கு, இந்த பொண்ணு, கெட்ட பெயர் ஏற்படுத்தி விடும் போலிருக்கிறதே...' என, புலம்புகிறார்.—ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !