கள்ளுக்கடை பாடகர்!
ராஜேட்டன் என்ற, 67 வயது முதியவர், 300க்கும் மேற்பட்ட மலையாள பாடல்களை, தன் நினைவாற்றலால், ஒரு எழுத்து கூட மாறாமல் பாடிக்கொண்டே இருப்பார். இவர் பாடுவது மேடைகளில் அல்ல, குடிமகன்கள் கூடும் கள்ளுக் கடையில் தான். காலையில் குளித்து, சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு தவறாமல் கள்ளு கடையில் ஆஜர் ஆகிவிடுவார். ஒரு டம்ளர் கள் குடித்து விட்டு, தன் கச்சேரியை ஆரம்பிப்பார். அங்கு வரும் குடிமகன்கள், இவருடைய பாட்டை ரசித்தபடி, கள் குடிப்பர்.'இவர் பாட்டை கேட்டபடி கள் குடித்தால், நல்லா போதை ஏறுகிறது...' என்று கூறுகின்றனர், குடிமகன்கள். இதனால், கேரளா இருட்டிக்குண்ணம் கள்ளுக் கடைக்கு வரும் குடிமகன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர், கடை ஊழியர்கள். — ஜோல்னாபையன்