ஆசிரியையின் நற்குணம்!
நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். எங்கள் தமிழ் ஆசிரியை மிக நன்றாக பாடம் நடத்துவதுடன், மாணவியரிடம், மிகவும் அன்பாக நடந்து கொள்வார். மாதவிடாய் பிரச்னையில் உள்ள மாணவியருக்கு, ஆயாவிடம் ஆரஞ்சு ஜூஸ் வாங்கிக் கொடுக்கச் சொல்லி பணம் கொடுப்பார். டீன் - ஏஜ் மாணவியரின் உடல் மற்றும் மனநிலையை புரிந்து நடக்கும் அவர் மீது எனக்கு எப்போதும் மதிப்பு உண்டு.— ம.பாக்கியலெட்சுமி மணி, மதுரை.