ADDED : செப் 14, 2025 | ADDED : செப் 14, 2025
சீனாவின், 'கிரேட் கிரீன் வால்' என்பது, மனிதனால் உருவாக்கப்பட்ட, உலகின் மிகப்பெரிய பசுமை திட்டம். இது, பாலைவனத்தை எதிர்க்கும் பிரமாண்ட மரச்சுவர். கடந்த, 1978ல் துவங்கப்பட்ட இத்திட்டம், வட சீனாவில் பரவி வரும், கோபி பாலைவனத்தின் மணல் புயல்கள் மற்றும் பாலைவனமயமாவதையும் தடுக்கும் நோக்கம் கொண்டது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை, உலக மக்கள் தொகையை விட, 8 மடங்கு அதிகமான எண்ணிக்கையில், மரங்கள் நடப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு, சராசரியாக 40 லட்சம் மரங்கள் நடப்பட்டதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 4,500 கி.மீ., நீளத்திற்கு, சீனாவின், 'பசுமை பெருஞ்சுவர்' உருவாகியுள்ளது. இது, மண்ணரிப்பை, 20 சதவீதம் குறைத்து, மில்லியன் கணக்கான (1 மில்லியன் = 10 லட்சம்) விவசாய நிலங்களைக் காப்பாற்றியுள்ளது. இது, சீனாவின் சுற்றுச்சூழல் போராட்டத்தில் புரட்சிகர முயற்சியாக கருதப்படுகிறது. பாலைவனத்தை பசுமையாக்கும் மாபெரும் கனவை நிறைவேற்றியதன் மூலம், உலக நாடுகளின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது, சீனா. - ஜோல்னாபையன்