உள்ளூர் செய்திகள்

பூனைகளுக்கு இங்கு பஞ்சமில்லை!

ஜப்பான் நாட்டிலுள்ள எகிமே பிரிபெக்சர் பகுதியில் உள்ள, ஓஷிமாயோ தீவு மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு வாழ்பவர்கள், பூனைகளை செல்லப்பிராணியாக வளர்ப்பதில் மிகவும் ஆர்வமுள்ளவர்கள். இத்தீவின் மக்கள் தொகை, 900 என்றால், இவர்களை விட பல மடங்கு அதிக எண்ணிக்கையில் பூனைகள் வாழ்கின்றன.இங்குள்ள மக்கள், மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டவர்கள் என்பதால், இங்கு ஒருபோதும் பூனைகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படுவதே இல்லை. இந்த பூனை தீவை காண ஏராளமான சுற்றுலா பயணியர் வருவதால், இங்குள்ள மக்களுக்கு வருவாயும் அதிகம் கிடைக்கிறது.ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !