இத படிங்க முதல்ல....
ரஜினிக்கு உருவான கதையில் அஜீத்!கே.வி.ஆனந்த், ரஜினிக்காக ஒரு கதை தயார் செய்து, ரஜினியை சந்தித்து, கதை சொல்லியிருக்கிறார். ஆனால் அவரோ, 'பின்னர் பதில் சொல்கிறேன்' என்று கூறியவர், இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை. அதனால், அந்த கதையில் நடிக்க, அஜீத்தை தேர்வு செய்து, அவரிடம், கதையை சொன்ன போது, உடனே, ஓ.கே., சொல்லி வி்ட்டார். தற்போது, தனுஷ் நடிக்கும் அனேகன் படத்தை இயக்கி வரும் ஆனந்த், அப்பட வேலைகள் முடிந்ததும், அஜித் நடிக்கும் படத்தை, இயக்குகிறார். ரஜினிக்கான கதையில், அஜித் நடிக்கும் விவகாரம், அவரது ரசிகர்களுக்கு தெரிய வர, 'அடுத்த சூப்பர் ஸ்டார் எங்கள் தல தான்...' என்று, கொண்டாடத் துவங்கி விட்டனர்.— சினிமா பொன்னையா* அட்டகத்தி படத்தில், வில்லேஜ் கெட்டப்பில் நடித்த தினேஷ், வாராயோ வெண்ணிலவே என்ற படத்தில், ஸ்டைலிஷாக, தன்னை மாற்றி, நடித்து வருகிறார். தமிழ் இயக்குனர்களை புகார் சொல்லும் நஸ்ரியா! லட்சுமி மேனனை, நஸ்ரியா சீக்கிரமே வீழ்த்தி விடுவார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நய்யாண்டி படத்தில் விஸ்வரூபமெடுத்த, தொப்புள் சமாச்சாரம், நஸ்ரியாவின் மார்க்கெட்டுக்கு ஆப்பு வைத்து விட்டது. அதனால், தமிழ் சினிமாவை, மலை போல் நம்பிக் கொண்டிருந்தவர், இப்போது, தாய்மொழியான மலையாளத்தில், உச்ச நடிகையாகும் முயற்சியில், ஈடுபட்டுள்ளார். அதோடு, 'தமிழ் இயக்குனர்களுக்கு திறமையானவர்களை பயன் படுத்த தெரியவில்லை. தோலுரிப்பதிலேயே ஆர்வம் கொண்டுள்ளனர்...' என்று, மலையாள படவுலகினரிடம், இங்குள்ள இயக்குனர்களை பற்றி சொல்கிறார். ஆல் பழுத்தால் அங்கே கிளி; அரசு பழுத்தால் இங்கே கிளி! — எலீசா *ஒற்றன் படத்தில், 'சின்ன வீடா வரட்டுமா...' என்று அர்ஜுனிடம் கேட்டபடி, குத்தாட்ட மாடிய தேஜாஸ்ரீ, மீண்டும் வில்லங்கம் படத்தில், ஒரு குத்தாட்டப் பாடலுக்கு நடனமாடுகிறார். காதலர்களை சேர்த்து வைக்க வரும் சங்கர்!ஒரு தலை ராகம் படத்தில் நடித்த சங்கர், அதன்பின், நினைத்து நினைத்து பார்த்தேன் என்ற தமிழ் படத்தில் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில், மணல் நகரம் என்ற படம் மூலம், இயக்குனராக தமிழில் பிரவேசித்துள்ளார். 'ஏற்கனவே, மலையாளத்தில், வைரஸ் மற்றும் கேரளோற்சவம் 2009 ஆகிய படங்களை இயக்கியுள்ள எனக்கு, இது மூன்றாவது படம்...' என்று சொல்லும் சங்கர், மறுபடியும், தமிழில் நடிகராக, தன் அடுத்த ரவுண்டை ஆரம்பிக்கவிருப்பதாகவும், எந்த மாதிரியான வேடங்களிலும் நடிக்க தயார் என்று சொல்லும் ஷங்கர், 'காதலர்களை சேர்த்து வைக்க போராடும் காட்சிகளில் நடிப்பதென்றால், எனக்கு ரொம்ப இஷ்டம்...' என்றும் கூறுகிறார். — சி.பொ., சாதிக்க விரும்பும் யுவன் ஷங்கர் ராஜா!பிரியாணி படத்தோடு, நூறு படங்களுக்கு இசையமைத்து விட்டார் யுவன் ஷங்கர் ராஜா. அதனால், சிலர் அவரை தொடர்பு கொண்டு, இதை பெரிய சாதனை போன்று பேசினர். ஆனால், அவர்களிடம், 'நூறு படங்களுக்கு இசையமைத்து விட்டதெல்லாம், ஒரு சாதனையே அல்ல. என் தந்தை இளையராஜாவை ஒப்பிடுகையில், இதெல்லாம் ரொம்ப சாதாரணம்...' என்கிறார். மேலும், 'இனி, வருங்காலத்தில், இளையராஜாவின் மகன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் வகையில், வித்தியாசமான இசையை கொடுக்கப் போகிறேன். அதையடுத்து, எனக்கு கிடைக்கும் பெருமைகளே, சாதனைகளாகும்...' என்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.— சி.பொ.,இரண்டு கோடி சம்பளத்தில் விழுந்த காஜல் அகர்வால்!மேல்தட்டு ஹீரோக்களுடன் மட்டுமே நடித்து வரும் காஜல் அகர்வால், நரைமுடி ஹீரோக்களின் படங்களை தவிர்த்து வருபவர், சம்பள விஷயத்தில், கோடிகளை சொல்லியடித்தால் சிக்கிக் கொள்கிறார். இந்த ரகசியத்தை தெரிந்து கொண்ட லிங்குசாமி, கமலை வைத்து, தான் தயாரிக்கும், உத்தமவில்லன் என்ற படத்தில் நடிக்க, தொடர்ந்து காஜலிடம் பேசி வந்தவர், அவர் மசியாததால், இப்போது, இரண்டு கோடி தருவதாக சொல்லி, காஜலை மடக்கி விட்டார். ஆக, கமலுக்கு ஜோடியாக, காஜல் நடிப்பதில், நீடித்து வந்த இழுபறி, இப்போது முடிவுக்கு வந்துள்ளது. — சினிமா பொன்னையாகறுப்பு பூனை!* ஆந்திராவில் முகாமிட்டுள்ள அங்காடித் தெரு நடிகை, புதிய படங்களை கைப்பற்றும் முயற்சியாக, மிட்நைட் பார்ட்டிகளில் பங்கெடுத்து வந்தார். விளைவு, சரக்கு நடிகையாகவும் மாறி விட்ட அம்மணியின் உடல்கட்டு, தற்போது பூதாகரமாகி விட்டதால், அவரைப் பார்ப்பவர்கள் ஆந்திராவின் சோனா என்கின்றனர். * விரல்வித்தை நடிகரை காதலிப்பதாக அறிவித்த நான்கெழுத்து நடிகையின் சுதந்திரமே, பறிபோய் விட்டதாம். அந்த அளவுக்கு நடிகை எங்கு சென்றாலும், அவரை கண்காணிக்க, சில எடுபிடிகளை பின்னாடியே அனுப்புகிறாராம் நடிகர். ஆனால், இந்த புலனாய்வு விவகாரம், நடிகையின் கவனத்துக்கு வந்த போது, கொதித்து விட்டவர், உடனே நடிகருக்கு போன் போட்டு, 'இப்படியே தொடர்ந்தால், காதலையே முறித்துக் கொள்வேன்...' என்று, மிரட்டல் விடுத்துள்ளார். இளமை சிகிச்சை எடுத்துக் கொள்ளும் மீனா! 'குழந்தைக்கு அம்மாவாகி விட்ட போதும், இன்னும் உன்னிடமுள்ள குழந்தை முகமும், குறும்புத்தனமும் போகவில்லை...' என்று, மீனாவுடன் நடித்த சில ஹீரோக்கள் அவரிடம் சொல்கின்றனர். அதேசமயம், 'உன் உடம்பு தான், ஆன்ட்டி கெட்டப்புக்கு மாறி விட்டது...' என்று அவரிடமுள்ள மாற்றத்தை உணர்த்துகின்றனர். அதனால், இப்படியே கண்டு கொள்ளாமல் விட்டால், முத்தின கட்டை போன்று, முறுக்கேறி விடுவோம் என்று, சுதாரித்துக் கொண்ட மீனா, இப்போது, மோகன் லாலுடன் மலையாள படத்தில் நடித்துக் கொண்டே, ஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் இளைத்து, இளமையை கூட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். காலம் அல்லாத காலத்தில் காய்த்ததாம் பேய் சுரைக்காய்! — எலீசா.அவ்ளோதான்