கவிதைச்சோலை!
பிரியமானவனே!திருவிழாவில்மாவிலை தோரணம் கட்டிவானத்தை அழகூட்டிக் கொண்டிருந்தாய்எனக்குன்னை மிகவும் பிடித்தது!தோரணத்தில் ஆங்காங்கேபூக்களை செருகியபடிநறுமணமிக்கப் பார்வையால்அவ்வப்போதுஎனக்குள் உன்னைபுரிய வைத்துக் கொண்டிருந்தாய்!நீர்த்தெளித்து கோலமிடும்பெண்களுடன் நின்றிருந்தேன்கோலத்தை ஒளிப்படம்எடுக்கும் பாவனையில்என்னை மட்டுமேரசித்துக் கொண்டிருந்தாய்!சுள்ளிகளை இட்டுஅடுப்பில் பொங்கல் வைக்கும்பெண்களுடன் கூடிநானும் தீயிட்டேன்தூரத்து சூரியனாய்புன்னகைத்துக் கொண்டிருந்தாய்!சாமிக்கு படையலிட்டுசர்க்கரைப் பொங்கல் தந்தபோதுஇனிக்கிறது இதயம் என்றாய்!உன் சொற்களில்உலகமே இனித்தது எனக்கு!மறுநாள் ஊருக்கு கிளம்புகையில்'திரும்ப எப்போ வருவே...'ஏக்க விழிகளோடுஎன்னை ஏறிட்டு நோக்கினாய்!பிரியமானவனே...உன் ஊரிலேயேசெத்து விட தோன்றியதுஎனக்கு!— இ.எஸ்.லலிதாமதி, சென்னை.