மெட்ரோ ரயில் சர்வீசில் திருநங்கைகள்!
திருநங்கைகள் என்றாலே, முகத்தை சுளிப்பவர்கள் வாழும் நாட்டில், அவர்களும் போற்றப்படக்கூடியவர்களே என்று நிரூபித்து, மற்ற மாநிலங்களுக்கு பாடம் கற்பித்துள்ளது, கேரள மாநிலம். சமீபத்தில், கேரளாவில் இயங்கத் துவங்கியுள்ள மெட்ரோ ரயிலில், ஏராளமான திருநங்கைகள் பணியாற்றுகின்றனர். ரயில் ஓட்டும் பணியிலும், இவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கேரளாவை பார்த்தாவது, மற்ற மாநில அரசுகளும், அவர்களும் மனிதர்கள் தான் என நினைத்து, வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தந்து, சுதந்திரத்துடன் வாழும் உரிமையை தர வேண்டும்.—ஜோல்னாபையன்