தீபத்தின் வகைகள்!
* தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும், 'தீப லட்சுமியே நமோ நம' என்று கூறி வணங்குவது அவசியம் * தீபத்தில் பல வகைகள் உண்டு. அவை: வீட்டின் தரையில், வண்ண பொடிகளால் கோலமிட்டு, அதன் மீது ஏற்றப்படும் தீபம், சித்திர தீபம்* அடுக்கடுக்கான தீப தட்டுகளில் ஏற்றப்படும் தீபம், மாலா தீபம்* வீட்டின் வெளிப்புறத்தில், உயர் பகுதியில் ஏற்றி வைக்கப்படும் தீபம், ஆகாச தீபம் * நதி நீரில் மிதக்க விடப்படும் தீபத்திற்கு, ஜல தீபம் என்று பெயர்* வீட்டின் அனைத்து பகுதியிலும் வரிசையாக ஏற்றி வைக்கப்படுவது, சர்வ தீபம்.* முன்னோர் நற்கதி அடையும் பொருட்டு, கோவில் கோபுரங்கள் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம், மோட்ச தீபம்* கார்த்திகை மாதம், பவுர்ணமி அன்று, மாலை வேளையில், சிவன் கோவில்களில் ஏற்றப்படுவது, சர்வாலய தீபம்* மலை உச்சியில், பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது, அகண்ட தீபம்* லட்சம் விளக்குகளால் கோவிலை அலங்கரிப்பது, லட்ச தீபம்.ஜெ.மாணிக்கவாசகம்