உள்ளூர் செய்திகள்

சீனாவில் இறுதிச் சடங்கில் ஆடை அவிழ்ப்பு நடனம்!

நம்ம ஊரில், இறுதி ஊர்வலத்தின்போது, குத்தாட்டம் போடுவது பேஷனாகி விட்டது. இந்த விஷயத்தில், சீனர்கள், நம்மை விட, ரொம்பவே அட்வான்சாக உள்ளனர். அங்கு, இறுதி ஊர்வலத்தின்போது, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அழகிகள் நடனமாடும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இதன் உச்சக்கட்டமாக, அந்த அழகிகள், ஆடைகளை அவிழ்த்து எறிந்து விட்டு நடனமாடுவர். சீனாவின் கிராமப்புறங்களில், இது வழக்கமான விஷயம்.இந்த விவகாரம், சமூக வலைத்தளங்கள் மூலம், உலகம் முழுவதும் அம்பலமாகி விட்டதால், சீனாவுக்கு, 'ஷேம்ஷேம்... பப்பி ஷேம்' ஆகி விட்டது. இதையடுத்து, இறுதிச் சடங்கின்போது, ஆடை அவிழ்ப்பு நடனங்களுக்கு தடை விதித்துள்ளது சீன அரசு.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !