தடுப்பூசியா... வேண்டவே வேண்டாம்!
குழந்தைகளுக்கான தடுப்பு ஊசியில் கூட, மூடத்தனம் கலந்து, அவர்களது உயிரோடு விளையாடும் கொடுமை,'படித்தவர்கள் அதிகம் வாழும் மாநிலம்...' என்று, மார் தட்டும் கேரளாவில் நிகழ்கிறது. கோழிக்கோடு மாவட்டம், மலப்புறம் எனும் ஊரில், இயற்கை வைத்தியர் ஒருவர் தலைமையில் நடந்த பிரசாரத்தில், 'குழந்தைகளின் உடலை வெட்டி, நறுக்கி அதிலிருந்து தான் தடுப்பூசி மருந்து தயாரிக்கப்படுகிறது...' என்று, பொய் பிரசாரம் கட்டவிழ்க்கப் பட்டது. இதற்கு, சில மத தலைவர்களும், ஆதரவு தெரிவித்துள்ளதால், பாமர மக்கள், இதை உண்மை என்றே நம்புகின்றனர். இதனால், பல பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில்லை. நாடு உருப்பட்ட மாதிரி தான்!— ஜோல்னாபையன்.