புதுவித சடங்கு!
ஆசியா கண்டத்தில், 17 ஆயிரம் அழகிய சிறிய தீவுகளை கொண்ட நாடு, இந்தோனேஷியா. வித்தியாசமான பழக்கவழக்கங்களை கொண்ட மக்கள் வாழும் நாடு என, குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக, பழங்குடி இன மக்களின் பழக்க வழக்கங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. ஒருவர் மரணித்தால் உடலை புதைப்பர் அல்லது எரியூட்டுவர். ஆனால், இந்தோனேஷியாவில் வசிக்கும், ஜாவானீஸ் இனத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தால், உடலை வீட்டினுள் பாதுகாத்து, ஆடை அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் செய்து, பல ஆண்டுகளுக்கு பாதுகாத்து வைத்திருப்பர். இறந்தவரின் நினைவு நாள் வரும்போது அவர் பயன்படுத்திய சிகரெட், மது உட்பட பல பொருட்களை வைத்து, ஆராதனை செய்வது இவர்களது வழக்கம். — ஜோல்னாபையன்