ஆலிலை கிருஷ்ணர்!
பீகார் மாநிலத்தில் உள்ள திருத்தலம், கயா. இங்கு பித்ருக்களுக்கு பிண்டம் போட்டு வழிபடுவது வழக்கம். இங்கு, விஷ்ணு பாதம் உள்ளது. மேலும், ஸ்ரீகதாதரர் கோவிலின் முன் உள்ள பெரிய ஆலமரத்தின் கீழ், பகவான் கிருஷ்ணன், குழந்தை வடிவில் ஆலிலையில் படுத்தபடி, வலது கால்கட்டை விரலை வாயில் வைத்து சூப்பிக் கொண்டிருக்கும், சிறிய திரு உருவை தரிசிக்கலாம். இவரைத் தொட்டு வணங்குவது அங்கு வழக்கத்தில் உள்ளது. குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இவரை வழிபட, குழந்தை செல்வம் கிடைக்கும்; மற்றவர்களுக்கு தோஷங்கள் நீங்கி, புனிதம் சேரும் என்பது ஐதீகம்.