வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஆட்டிசம் autism பாதிப்புள்ள குழந்தையை வளர்ப்பது எவ்வளவு கடினமானது என்று தெரிந்தவர்களுக்கு அந்தப் பெண்ணின் வலி புரியும். "எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது" என்ற காரணத்தைக் கூறி அவர் வேலையை விட்டது ஒருவித தப்பித்து ஓடும் மனப்பான்மை escapism என்று சிலர் நினைக்கலாம் ஆனால் அது அப்படி அல்ல. உலகம் முழுவதும் ஆட்டிசம் என்றால் என்னவென்று கேட்டுக்கொண்டிருக்க, அதைத் திரும்பத் திரும்ப விளக்கி அவர் சோர்வடைந்திருந்த நிலையில், அவரது கணவரின் குடும்பத்தாரும் மாமனார்-மாமியார் அவர்களைக் கைவிட்டபோது அவர் முற்றிலும் நிராதரவாக உணர்ந்தார் அந்த வலி அளவிட முடியாதது. மேலும், அவரது கணவரின் சம்பளத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் அது அரசு வேலையாகத் தெரியவில்லை. மைக்ரோசாஃப்ட், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்களே ஊழியர்களைச் சாதாரணமாக வேலையை விட்டு நீக்கும் சூழலில், அதனால் பலர் நிதி நெருக்கடியைச் சந்திப்பதை நாம் பார்க்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, அந்தக் குழந்தையின் எதிர்காலம் மற்றும் அதற்கான சிகிச்சைச் செலவுகள் என்னவாகும்? வீட்டில் ஒரு செவிலியரையோ அல்லது உதவியாளரையோ aaya நியமிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தங்கள் சொந்தப் பேரக் குழந்தையைப் பராமரிக்கவே மறுத்துவிட்ட குடும்பத்தினர் இருக்கும்போது, அவர்கள் மட்டும் எப்படிச் சிறந்த முடிவுகளை எட்ட முடியும்? பெற்றோர் ஆதரவு இல்லாத கடினமான சூழலிலும், அந்த மகன் தன்னால் முடிந்த நியாயமான தொகையைத்தான் அனுப்பி வருகிறார் என்று தோன்றுகிறது. ஒரு குழந்தையை வளர்க்க ஒரு சமூகமே தேவைப்படும் நிலையில், ஒரு சிறப்புத் தேவை கொண்ட குழந்தையைப் பொறுத்தவரை, பெற்றோர் மட்டுமே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது. தாத்தா-பாட்டி கூட உதவாத நிலையில், அவர்கள் தங்கள் பிள்ளைகளிடமிருந்து எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறார்கள். மாமனார்-மாமியாருக்குத் தங்கள் மகன் மற்றும் பேரக்குழந்தை மீது உண்மையான அன்பு இருந்திருந்தால், அவர்கள் அவர்களைக் கைவிட்டிருக்க மாட்டார்கள் அதோடு, 15,000 ரூபாய் கேட்டுத் துன்புறுத்தியிருக்கவும் மாட்டார்கள். முதியோர் நலச் சட்டத்தின்படி, அதிகபட்சத் தொகையே 10,000 ரூபாய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு குழந்தையை பெற்று வளர்த்து, படிக்க வைப்பது கடமை என்றாலும், வயதான காலத்தில், பென்சன் இல்லாதபோது, அந்த குழந்தையிடமிருந்து ஒரு சிறிய பொருளாதார உதவியை பெற்றோர் எதிர்பார்ப்பது தவறல்ல. ஆட்டிசம் குழந்தை இருந்தாலும், மகனின் அனைத்து வருமானமும் அவனின் குடும்பத்திற்கு மட்டும் தான் என்பது சரியல்ல. மகன் பத்து சதவீதத்தை தான் பெற்றோருக்கு கொடுக்கிறான். இருபத்தைந்து சதவீதம் பெற்றோர் கேட்டால், தவறு எனலாம். ஆட்டிசம் குழந்தையை நீங்கள் பார்த்துக்கொள்வதற்கு பாராட்டுக்கள். ஆனால் உங்களின் கணவரின் பெற்றோரும் வாழவேண்டும். அப்போது தான் நீங்களும் நன்றாக வாழமுடியும். பகிர்ந்து வாழ்வதே சரியான வாழ்க்கை.
ஆட்டிசம் குழந்தையை வளர்ப்பது நிச்சயமாக நரகமே. அதுவும் இரட்டையாய் இருந்தால் அம்போ. என் cousin அண்ணன் மகள் அவஸ்தை பட்டு கொண்டு இருக்கிறார். பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. நான் அவர்கள் வீட்டுக்கு வருவதை கூட மறைமுகமாகவிரும்பவில்லை. என்ன செய்வது?
மிகுந்த வேதனையான நேரம் நாங்கள் பெங்களூரில் இருந்தபோது எங்களது அபார்ட்மெண்டில் மேல்மாடியில் ஒரு மலையாள தாய் அவரது ஆட்டிசம் பாதித்த மகனோடு வாழ்ந்தார் அவன் எப்பொழுதும் எச்சிலை துப்புவது , அவனது கழிவுகளை எடுத்து எண்களின் பால்கனியில் எறிவது போன்று இருந்ததால் அந்த வீட்டின் ஓனரிடம் சொல்லி வேதனைப்பட்டோம் ஆனால் அந்த தாயின் மாமியாரோ வந்து எங்களிடம் சண்டை போட்டாள் , அப்போது என் கணவர் அவ்வளவு அக்கறையாக இருந்தால் உனது வீடே பெரிதுதான் அங்கேயே வைத்து கொள்ளலாமே ஏன் எண்களின் உயிரை எடுக்கிறீர்கள் என்று கேட்டார் , அதற்க்கு அந்த மாமியார் ஆடிய ஆட்டம் எப்பா சொல்லி மாளாது , ஆட்டிசம் பாதித்த குழந்தையைவிட அந்த உறவினர்களின் நடத்தை தான் வேதனைக்குரியது என்பதனை சொல்ல முடியவில்லை
சகுந்தலா மேடம், ஆட்டிசம் கொண்ட ஒரு குழந்தையை வளர்ப்பது நரகத்தில் வாழ்வதைப் போன்றது. ஒரு நாள் ஆட்டிசம் குடும்பத்துடன் இருந்து அவர்களின் போராட்டத்தை நேரில் பார்த்து புரிந்துகொள்ளுங்கள். தயவுசெய்து தாய்மார்களை எளிதாக குறை சொல்லாதீர்கள். பெரியவர்களையோ அல்லது மைத்துனியையோ கண்மூடித்தனமாக ஆதரிக்காதீர்கள். உங்கள் இந்த பதில் மிகவும் வருத்தத்தை அளித்தது.
எனக்கும் அது தான் தோன்றியது.