உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

பா.அனுமந்த்ரா, கோவூர், சென்னை: எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என, பிரகடனப்படுத்தி வரும் திராவிட மாடல் அரசு, 'டாஸ்மாக்' என்றிருக்கும் ஆங்கிலப் பெயரை அகற்றிவிட்டு, 'உற்சாகபானக் கடைகள் என. அழகு தமிழில் பெயர் வைக்குமா?சரியாகச் சொன்னீர்கள்! உற்சாக பானக் கடைகள்' எனப் பெயர் வைத்தால் சரியாக இருக்கும்!பி.வேல்சாமி, நெசப்பாக்கம், சென்னை: அரசாணை பிறப்பித்தும், சாலை பணி மந்தமாக நடப்பதாக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு, 'டோஸ்' விட்ட அமைச்சர் வேலு. விரைந்து முடிக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது பற்றி...விரைந்து முடிக்க வேண்டும் என, மட்டும், 'டோஸ்' விட்டால் போதாது தரமான சாலைகளை, ஒழுங்காக போடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தண்ணீர் அடிபம்ப்போடு 'சேர்த்து, சாலை போட்டு விடுவர்.ஆளும் அமைச்சர்களுக்கு, இதெல்லாம் கண்ணுக்குத் தெரிவதும் இல்லை; அவர்கள் கவனம் செலுத்துவதும் இல்லை!எம்.துரைராஜ், குண்டடம், திருப்பூர்: தன்னிடம் கோரிக்கை வைத்த பெண்ணுக்கு, தமிழக கவர்னர், தன் விருப்ப நிதியிலிருந்து ஆட்டோ வழங்கியுள்ளாரே...ஒரு பெண்ணுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தால், அவரது குடும்பமே நல்ல நிலைக்கு வரும் என்பதை புரிந்து வைத்துள்ளார், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நிதர்சனம் புரிந்தவர்!தமிழக ஆட்சியாளர்கள், இதை போல் செய்ய வேண்டும்!* சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி: பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றா விட்டால், மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும்...' என, சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளதே...சரியான எச்சரிக்கை தான்; ஆனாலும், அபராதம் போன்று. பனிஷ்மென்ட்டை, கொடிக் கம்பங்கள் வைப்போர் மற்றும் கலெக்டர்களுக்கு கொடுப்பது. இந்நடவடிக்கைகளை மட்டுப் படுத்தும்; போக்குவரத்து நெரிசல் குறையும்: பல விபத்துகளும் குறையும்!ச.பிரசன்னா, காட்டுப்பாக்கம், சென்னை: நம் மாநிலத்தின் நாமக்கல் மண்டலத்திலிருந்து, அமெரிக்க நாட்டிற்கு முட்டைகள் ஏற்றுமதி ஆகிறதாமே...நாம் மிகவும் பெருமைப்பட வேண்டிய தகவல், நாமக்கல் மாவட்டம், தரமான முட்டை தயாரிப்பில் உயர்ந்து திகழ்கிறது!மா.தருண் ராஜா, தென்காரி: 'ஸ்டாலினுக்கு நான் துணையாக, இறுதி மூச்சு வரை இருக்க வேண்டும்: அது தான் என் ஆசை... என, அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளாரே...வேறு என்ன செய்வது? தன் மகனுடைய நிலைநிறுத்தியாக வேண்டும்: ஈட்டிய சொத்தைக் காப்பாற்றியாக வேண்டும்; இன்னும் சொத்து சேர்க்க வேண்டுமே!கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டால். இதையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள முடியாதே! அதனால். இப்போதெல்லாம், ஸ்டாலின் மகன் உதயநிதிக்கும். 'ஐஸ்' வைக்கிறார்!*பெ.பொன்ராஜபாண்டி. மதுரை: தி.மு.க.,வின் நான்கரை ஆண்டு ஆட்சியில், 63 சிலைகள். 11 மணி மண்டபங்கள் திறக்கப்பட்டுள்ளன என, தமிழக அரசு பெருமிதம் கொள்கிறதே...எத்தனை தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது எள. கூறுவது தான். அரசுக்கு பெருமிதம்; சிலைகளும், மணிமண்டபங்களும் தேவையா?ஒரு சிறப்பு கேள்விக்கான வாசகர் பம்பர் பரிசு 1500 ரூபாயும் நட்சத்திர குறியீட்ட இரண்டும் தலா 1,000 ரூபாயும், மற்ற கேள்விகள் தலா 500 ரூபாயும் பரிசு பெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !