சாதிக்க வயது தடையல்ல!
அச்சாயன் என்பவர், 100 வயதை கடந்த பின்னரும் இளமையாக இருக்கிறார். வீட்டில், சோம்பி உட்கார்ந்திருக்கவில்லை. கடந்த, 50 ஆண்டுகளாக, தன், 'பிரிமியர் பத்மினி' காரில், ஊர் சுற்றி வருகிறார். இந்த வயதிலும் மூக்குக் கண்ணாடி கூட பயன்படுத்தாமல் வெகு துாரம் கார் ஓட்டுகிறார்.வங்கியில் பணியாற்றியபோது, 35 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய காரை, இன்றும் புது கார் போலவே பராமரித்து வருகிறார். கேரள மாநிலம், கோட்டயம், மல்லப்பள்ளியை சேர்ந்த இவர், 50 ஆண்டுகளாக வண்டி ஓட்டியும், ஒரு சிறு விபத்து கூட ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. — ஜோல்னாபையன்