உள்ளூர் செய்திகள்

புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டியெடுத்து எரிக்கும் விழா!

இந்தோனேசியா நாட்டின், பாலி தீவில் வசிக்கும் மக்கள், அத்தீவிலுள்ள பதங்பாய் துறைமுகத்தின் கடற்கரையோரத்தில், புதைக்கப்பட்ட சடலங்களைத் தோண்டியெடுத்து எரிக்கும் வித்தியாசமான விழாவைக் கொண்டாடுகின்றனர்.இறப்புக்கு பின், ஆன்மா விடுதலை அடைவதாகவும், அதனால், அவர்கள் வாழ்க்கையின் அடுத்த சுழற்சியைத் தொடங்க முடியும் எனவும் நம்புகின்றனர், அந்தப் பகுதி மக்கள். புதைத்த சடலங்களை சிறிது காலத்துக்குப் பின் தோண்டியெடுத்து, எரிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக் கின்றனர்.தனித்தனியாக ஒவ்வொரு சடலமாக எரியூட்டினால், செலவு அதிகமாகும் என்பதால், சடலங்களை மொத்தமாக எரியூட்டுவதாக கூறுகின்றனர், அந்த மக்கள்.புதைக்கப்பட்ட, 117 சடலங்களை, சமீபத்தில் தோண்டியெடுத்த அவர்கள், மதச் சடங்குகளை மேற்கொண்டனர். பின்னர், அந்த சடலங்களை தகன சாலைக்கு சுமந்து சென்றனர்.ஊர்வலத்தில் பங்கேற்ற அவர்களது உறவினர்கள், இறந்தவர்களின் புகைப்படங்களையும் சுமந்து சென்று, சவப்பெட்டியினுள் வைத்தனர்; அவர்களை மனதில் நினைத்து சவப்பெட்டிகளுக்கு தீ வைத்தனர்.ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !