ரூ.457 கோடிக்கு ஏலம் போன, ரேஸ் கார்!
ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற ஏலத்தில், 70 ஆண்டுகள் பழமையான, 'ஸ்ட்ரீம்லைனர் மெர்சிடிஸ்' எனும் ரேஸ் கார், இந்திய மதிப்பில், 457 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.கடந்த, 1965ம் ஆண்டு முதல், ஜெர்மனியில் உள்ள மெர்சிடிஸ் அருங்காட்சியகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது, இந்த கார். ஜெர்மனியில், ஸ்டட்கார்ட் நகரில் நடைபெற்ற ஏலத்தில், பெயர் வெளியிட விரும்பாத ஒருவர், இந்த காரை வாங்கியுள்ளதாக, ஏலத்தை நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.'பார்முலா ஒன்' கார் பந்தய ஜாம்பவன்களாக இருந்த, பிரிட்டனை சேர்ந்த ஸ்டிர்லிங் மோஸ் மற்றும் அர்ஜென்டினாவை சேர்ந்த ஜுவான் மேனுவல் பேன்ஜியோ பயன்படுத்திய, கார் இது.வெள்ளி நிறத்தில் மின்னும் இந்த காரை போலவே, இன்னும் நான்கு கார்கள் மட்டுமே உள்ளதாக, மெர்சிடஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.— ஜோல்னாபையன்