புத்தக காதலர்!
கர்நாடக மாநிலம், மைசூரு பாண்டவபுரா, ஹரனஹள்ளி பகுதி, ஒரு சிறு கிராமம். இங்கு, 75 வயது நிரம்பிய, ஹங்கே கவுடா என்பவர் வசித்து வருகிறார். இவரை, புத்தக தந்தை என்று அழைக்கின்றனர். இவர், தன் வீட்டில், 20 லட்சம் புத்தகங்களை வைத்திருக்கிறார். 20 வயதில் பேருந்து ஓட்டுநராக இருந்தபோது புத்தகங்களை காதலிக்க துவங்கியவர், கையில் பணம் சேரும்போதெல்லாம், புத்தகம் வாங்க கடைகளுக்கு ஓடுவார். புத்தகம் மீது ஏற்பட்ட ஆர்வத்தில், தன் ஓட்டுனர் வேலையை ராஜினாமா செய்து, கல்லுாரியில் சேர்ந்து, ஆங்கில இலக்கியத்தில் பட்ட மேற்படிப்பில் தேர்வானார். இப்போது, முழுநேர லைப்ரேரியன் ஆகி விட்டார். இவரிடம், 5 லட்சம் ஆங்கில புத்தகங்களும், 5 ஆயிரம் அகராதிகளும் உள்ளன. இதை தவிர, பிறமொழி புத்தகங்களும் இருக்கின்றன. - ஜோல்னாபையன்