உள்ளூர் செய்திகள்

துணிச்சல்கார பெண்மணி!

இமயமலை உச்சிக்கு ஏறி, தன் வாழ்நாள் கனவை நிறைவேற்றி இருக்கிறார், கேரளாவை சேர்ந்த, 37 வயது, செரீனா லத்தீப் என்ற பெண்மணி. பனியால் சூழப்பட்ட மலைகள் மீது ஏறும்போது பல முறை, ஆக்சிஜன் குறைவால் சுவாசிக்க முடியாமல் தவித்துள்ளார். அப்போதெல்லாம், தன் லட்சியம் கண்முன் வர, துணிந்து முன்னேறி வெற்றி கண்டுள்ளார். 'இதற்கு முன், ஆப்ரிக்காவின் மிகவும் உயரமான, கிளிமஞ்சாரோ சிகரத்தின் மீது ஏறிய போது தான், இமயமலை மீதும் ஏற வேண்டும் என்ற ஆசை வந்தது. மலையேற்றத்துக்கு என் குடும்பத்தினர் ஒத்துழைப்பு அளிப்பதால் மகிழ்ச்சியாக மலை ஏறுகிறேன்...' என்கிறார், செரீனா. —ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !