எருமை வாகனம்!
எருமைக்கிடா மீது அமர்ந்து, எமன் தான் பயணிப்பார். ஆனால், கேரள மாநிலம், கொல்லம் அடுத்த, ஓடனாவட்டம் பகுதியை சேர்ந்த, பிளஸ் 2 மாணவி, சுருதி என்பவர், விரும்பி பயணிப்பதும், எருமை மீது தான். சிறுவயதில் இருந்து, குதிரை மீது அமர்ந்து செல்ல வேண்டும் என்பது, சுருதியின் கனவு. ஆனால், கூலி வேலை செய்யும் தந்தையால் குதிரை வாங்க முடியவில்லை.சுருதியின் வீட்டு அருகே உள்ள எருமை, கன்று ஈன்றது. அந்த கன்றை மிகவும் நேசித்த, சுருதி, அதன் தோழியாகி விட்டார். அக்கன்று, இன்று சொன்ன பேச்சை கேட்கும் பெரிய கிடாவாக வளர்ந்து விட்டது. எருமை மீது, சுருதி அமர்ந்து செல்வதை வியந்து பார்க்கின்றனர், அப்பகுதி மக்கள். ஜோல்னாபையன்