இதப்படிங்க முதல்ல!
இயக்குனர் ஷங்கரின் மெகா பிளான்!பாகுபலி போன்று, பிரமாண்ட படம் இயக்க போவதாகக் கூறி வந்தார், இயக்குனர் ஷங்கர். கேம் சேஞ்சர் படம் திரைக்கு வந்ததை அடுத்து, 'வேள்பாரி' என்ற நாவலை மையமாக வைத்து, ஒரு படம் இயக்க தயாராகி வருகிறார். சரித்திர பின்னணி கொண்ட இந்த படம், 1,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது.அதையடுத்து, ஹாலிவுட் தரத்தில், 'சயின்ஸ் பிக்ஷன்' படத்தையும் இயக்கப் போகிறார். 'மல்டி ஹீரோ' கதையில் உருவாகும் அந்த படம், 'ஸ்பை திரில்லர்' கதையில் உருவாகிறது.— சினிமா பொன்னையாநித்யா மேனனை கட்டிப்போட்ட, தேசிய விருது!'எனக்கு பிடிக்காத ஒரே துறை, சினிமா தான். 'மாஸ் மீடியா' என்றாலும், இங்கு சுதந்திரமே கிடையாது. மற்றவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தாக வேண்டும். பொது இடங்களுக்கு செல்லவே முடியாது.'இதன் காரணமாகவே, கைவசம் உள்ள படங்களோடு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட நினைத்தேன். ஆனால், அப்போது பார்த்து, தேசிய விருது கிடைத்து விட்டது. அதனால், இனிமேல் காலம் உள்ளவரை சினிமாவில் தான் குப்பை கொட்டியாக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளேன்...' என்கிறார், நித்யா மேனன். — எலீசா அடக்கி வாசிக்கும், ராஷ்மிகா!பாலிவுட்டுக்கு சென்றதும், படு கவர்ச்சியாக நடித்த ராஷ்மிகா மந்தனா, இப்போது அடக்கி வாசிக்க துவங்கி இருக்கிறார்.'கவர்ச்சி என்பது, உடற்கட்டை வெளிப்படுத்துவதில் இல்லை. கண்களிலும், உடல் அசைவின் வசீகரத் தன்மையிலும் தான் இருக்கிறது என்பதை, நான் புரிந்து கொண்டேன். அதனால், இனிமேல் நடிக்கும் படங்களில் கவர்ச்சியை புதிய கோணத்தில் வெளிப்படுத்தி, ரசிகர்களை மயக்கி போடுவேன்...' என்கிறார், ராஷ்மிகா.எலீசாஅஜித்துக்கு கதை, ரெடி பண்ணும், லோகேஷ் கனகராஜ்!கமல், விஜய் மற்றும் கார்த்தி நடிப்பில் படங்கள் இயக்கிவிட்ட லோகேஷ் கனகராஜ், தற்போது, ரஜினி நடிப்பில், கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், அடுத்தபடியாக, அஜித் நடிப்பிலும் படம் இயக்கும் ஆர்வம், அவருக்கு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, அஜித்துக்கு ஏற்ற கதையை உருவாக்கி வருவதாக கூறும், லோகேஷ் கனகராஜ், 'கைதி - 2 படத்தை இயக்கி முடித்ததும், அடுத்து, அஜித்தை சந்தித்து கதை சொல்லவும் திட்டமிட்டிருகிறேன்...' என்கிறார் — சி.பொ.,இளவட்ட ரசிகர்களை சுண்டி இழுக்கும் அனிகா சுரேந்திரன்!அஜித் நடித்த, என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் உட்பட பல படங்களில், குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், அனிகா சுரேந்திரன். இவரை, தற்போது தான் இயக்கியுள்ள, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில், நாயகி ஆக்கி இருக்கிறார், தனுஷ்.இந்த முதல் படத்திலேயே இளவட்ட ரசிகர்களை சுண்டி இழுக்க வேண்டும் என்பதற்காக, முத்தக்காட்சிகள் மற்றும் கட்டிப்பிடித்து உருண்டு புரண்டு, 'ரொமான்டிக்' காட்சிகளில் நடித்திருப்பதாக கூறுகிறார், அனிகா.'இந்த படத்தில், 'ரொமான்டிக்' நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ள நிலையில், இனிவரும் படங்களில், 'கிளுகிளு'ப்பான நடிப்பை வெளிப்படுத்தி இளவட்டங்களின், 'பேவரிட் ஹீரோயினி' ஆகிடுவேன்...' என்கிறார், அனிகா சுரேந்திரன். — எலீசாமீண்டும் ஹிந்திபடம் தயாரிக்கும், அட்லி!ஹிந்தியில், ஷாருக்கான் நடிப்பில், ஜவான் படத்தை இயக்கி வெற்றி பெற்ற, அட்லி, அதன் பின் தமிழில், விஜய் நடிப்பில் இயக்கிய, தெறி படத்தை ஹிந்தியில், பேபி ஜான் என்ற பெயரில் தயாரித்தார். ஆனால், அந்த படம் படுதோல்வி அடைந்து விட்டது.இருப்பினும், அடுத்து, ஹிந்தி நடிகர், சாகித் கபூரை நாயகனாக வைத்து ஒர் ஹிந்தி படத்தை தயாரிக்கப் போகும் அட்லி, 'பேபி ஜான் படத்தில் விட்டதை, இதில் பிடிப்பேன்...' என்கிறார்.— சினிமா பொன்னையா கறுப்புப்பூனை!கதையின் நாயகியாக நடித்த படங்கள், பெரிதாக கை கொடுக்காததால், மீண்டும் மார்க்கெட்டில் இருக்கும், 'ஹீரோ'களுடன் நடித்து தன்னை சினிமாவில் தக்க வைத்துக் கொள்வதில் தீவிரம் காட்டத் துவங்கினார், தாரா நடிகை.ஆனால், மார்க்கெட்டில் இருக்கும் நடிகர்களின் படங்களை தயாரிப்பவர்களோ, தாராவை ஒப்பந்தம் செய்யாததுடன், முத்தின கத்தரிக்காய் என்பது போன்று கிண்டல் செய்து, கடுப்பேற்றி விட்டனர். இதனால், தற்போது, பீட்சா நடிகரை வைத்து, ஒரு படத்தை தானே தயாரித்து, அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார்.மேலும், 'என்னை முத்தின கத்தரிக்காய் என்று சொன்னவர்கள் முன், மீண்டும் நான் இளசுகளை கவரும் நாயகியாக ஜொலித்துக் காட்டுகிறேன்...' என்றும் சவால் விட்டுள்ளார், தாரா நடிகை.சினி துளிகள்!* சில ஆண்டுகளாக தன் தாய்மொழியான, மலையாளத்தில் நடிக்காமல் இருந்து வந்த நயன்தாரா, தற்போது, டியர் ஸ்டூடன்ஸ் படத்தை அடுத்து, இன்னொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.அவ்ளோதான்!