இதப்படிங்க முதல்ல...
விஜய் செய்த திடீர் மாற்றம்!தற்போது, விஜய் நடித்து வரும், 69வது படம், 'கமர்ஷியல்' கதையில் உருவாகிறது. அதோடு, இந்த படத்தில் அரசியல் குறித்த சில, 'பஞ்ச்' வசனங்களை வைக்குமாறு ஆரம்பத்தில் இயக்குனருக்கு உத்தரவு போட்டிருந்தார், விஜய். ஆனால், தற்போது திடீரென்று அந்த வசனங்களை துாக்க சொல்லி விட்டார்.'நான் பேசி நடிக்கும், 'பஞ்ச்' வசனங்கள், சில அரசியல் கட்சிகளை குறி வைப்பது போல் இருப்பதால், படம் திரைக்கு வரும்போது கூச்சல் போடுவர், கண்டபடி விமர்சிப்பர். அதற்கு நாம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டாம்...' எனக் கூறிவிட்டார், விஜய்.சினிமா பொன்னையாமாளவிகா மோகனனை உற்சாகப்படுத்திய, தெலுங்கு சினிமா!மலையாள நடிகையான மாளவிகா மோகனன், தமிழில், மாஸ்டர், மாறன் மற்றும் தங்கலான் என, பல படங்களில் நடித்தார். இருப்பினும், எந்த படத்திலும் அவர் நடிப்பு பேசப்படவில்லை. தற்போது தெலுங்கில், பிரபாஸுக்கு ஜோடியாக, ராஜா சாப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.'ராஜா சாப் படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு எனக்கு அழுத்தமான, சவாலான வேடம் கிடைத்துள்ளது. அதனால், இந்த படத்தில் என் தனித்திறமையை வெளிப்படுத்தி, என்னை நிரூபிக்கப் போகிறேன். மேலும், இந்த படத்திற்குப் பின், என் சினிமா கேரியரே முற்றிலுமாக மாறப் போகிறது...' என்கிறார், மாளவிகா மோகனன்.எலீசாஐஸ்வர்யா, போனுக்காக காத்திருக்கும், திரை உலகினர்!பாலிவுட் நடிகை, ஐஸ்வர்யா ராயை பொறுத்தவரை, அவருக்கு திரைத்துறையினர் யார் போன் செய்தாலும், உடனே பேச மாட்டார். போனில் அழைக்கும் நபர்களின் எண்களை குறித்து வைத்து, வேறொரு நாளில் தான் அனைவருக்குமே, போன் செய்து பேசுவார்.இதன் காரணமாக, ஐஸ்வர்யா ராயிடம், 'கால்ஷீட்' கேட்க வேண்டும், கதை சொல்ல வேண்டும் என நினைக்கும் திரை உலகினர், அவருக்கு அழைப்பு விடுத்து காத்திருக்கின்றனர்.— எலீசாநயன்தாராவை நிராகரித்த, இயக்குனர்கள்!ஹிந்தியில், ஷாருக்கானுக்கு ஜோடியாக, ஜவான் படத்தில் நடித்த, நயன்தாரா, மீண்டும் ஹிந்தியில் இருந்து புதிய பட வாய்ப்புகள் வராததால், ஹிந்தி படம் எடுக்கும், தமிழ் இயக்குனர்களை தொடர்பு கொண்டு வாய்ப்பு கேட்டார்.தற்போது ஹிந்தி படம் இயக்கும், ஏ.ஆர்.முருகதாஸ், வெங்கட் பிரபு மற்றும் விஷ்ணுவர்தன் உள்ளிட்ட சில இயக்குனர்களோ, 'மீண்டும், 'ஹீரோயின்' வாய்ப்பு எல்லாம் தர முடியாது. வேண்டுமானால், 'கேரக்டர் ரோல்' தருகிறோம்...' எனச் சொல்லி அதிர்ச்சி கொடுக்க, 'உங்க படமே தேவையில்லை...' என்று, திரும்பி விட்டார், நயன்தாரா.—எலீசாகுடும்பக் கதைகள் தேடும், சூரி!கருடன் படத்தை அடுத்து, மாமன் என்ற படத்தில் நடித்து வருகிறார், சூரி. தாய் மாமன் உறவை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படம், 'பேமிலி ஆடியன்ஸை' தியேட்டருக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கிறார்.'இனிமேல் குடும்ப உறவுகளுக்கு இடையே நடைபெறும் கருத்து மோதல்களை மையமாகக் கொண்ட கதைகளில் நடிக்க விரும்புகிறேன்...' என்பவர், அடுத்தடுத்து நடிப்பதற்கு, அரை டஜன் குடும்பக் கதைகளை, ஓ.கே., பண்ணி வைத்திருக்கிறார்.சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!'ரொமான்டிக்' நாயகியாக வளர துவங்கி இருக்கும் பிரமாண்ட இயக்குனரின் மகள், தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் மிக ஜாலியாக கும்மாளமடித்து வருகிறார். இந்த தகவல் பிரமாண்டத்திற்கு தெரிந்ததும், செம கடுப்பாகி விட்டார்.உடனே, தன் மகளை அழைத்து, 'ஆரம்பத்தில் சொன்னது போன்று நடிகர்களுடன் கோடு போட்டு பழக வேண்டும். நட்பு என்ற பெயரில், 'லிமிட்' தாண்டினால், சினிமாவில் நடிப்பதற்கே தடை போட்டு விடுவேன்...' என, மகளை எச்சரித்துள்ளார். இதையடுத்து, தற்போது அடக்கி வாசிக்க துவங்கி இருக்கிறார், பிரமாண்டத்தின் மகள்.சினி துளிகள்!* விருமன், மாவீரன் மற்றும் நேசிப்பாயா போன்ற படங்களில் நடித்தார், அதிதி ஷங்கர். தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் கிராமத்து வேடத்தில் நடித்து வருகிறார்.* தான் இயக்கி், மாஸ்டர், விக்ரம், லியோ மற்றும் கூலி போன்ற படங்களுக்கு, அனிருத்தை இசையமைக்க வைத்தார். லோகேஷ் கனகராஜ். அடத்து தான் இயக்கும், கைதி - 2 படத்திற்கு இசையமைக்க, ஷாம் சி.எஸ்.,சை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.அவ்ளோதான்!