இதப்படிங்க முதல்ல...
மீண்டும் பெண், கெட் அப்பில் வடிவேலு!சுந்தர்.சி காம்பினேஷனில், வடிவேலு நடித்த படங்களில் இடம்பெற்ற கைப்புள்ள, நாய் சேகர், வீரபாகு, அட்வகேட் வெடிமுத்து போன்ற, அவரது காமெடி கதாபாத்திரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன.தற்போது மீண்டும், கேங்கர்ஸ் என்ற படத்தில், சுந்தர்.சியுடன் கைகோர்த்து இருக்கிறார், வடிவேலு. இந்த படத்தில், ஐந்து விதமான, 'கெட்-அப்'களில் நடித்திருக்கும் வடிவேலு, அதில் ஒரு பெண்,'கெட்-அப்'பிலும் கலக்கி இருக்கிறாராம்.—சினிமா பொன்னையாகவர்ச்சிக்கு மாறும், கிருத்தி ஷெட்டிதெலுங்கில், கிருத்தி ஷெட்டி நடித்த முதல் படமான, உப்பெனா வெற்றி அடைந்தபோதும், அதன்பிறகு அவர் நடித்த படங்கள் எல்லாம் தோல்வியடைந்து, அவரது மார்க்கெட்டை சரித்து விட்டன.இதன் காரணமாகவே தமிழில், வா வாத்தியார், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என, சில படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார், கிருத்தி ஷெட்டி. மேலும், பக்கா, 'கமர்ஷியல்' கதைகளாக தேர்வு செய்வதோடு, பாலிவுட் நடிகையர் ரேஞ்சுக்கு, கவர்ச்சியில் பட்டையை கிளப்பவும் முடிவெடுத்துள்ளார்.—எலீசாகுழந்தை பிறப்புக்கு பிறகும், ஹீரோயினியான மேக்னாராஜ்!தென் மாநில மொழிகளில் பரவலாக நடித்து வந்த, மேக்னா ராஜ், சிரஞ்சீவி சார்ஜா என்ற கன்னட நடிகரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர் கர்ப்பிணியாக இருந்த போது, கணவர் இறந்துவிட்ட நிலையில், மகனை பெற்றெடுத்த, மேக்னா ராஜ், தற்போது மீண்டும் சினிமாவில், 'என்ட்ரி' கொடுத்திருக்கிறார்.குறிப்பாக, மலையாளத்தில், சுரேஷ் கோபிக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கும் அவர், மீண்டும் தமிழில் மார்க்கெட்டை பிடிப்பதற்காக, கதைகள் கேட்டு வருகிறார். அதோடு, 'பாலிவுட் நடிகையரை போன்று, திருமணம், குழந்தை பிறப்புக்கு பிறகும், 'ஹீரோயினி' ஆகத்தான் நடிப்பேன்...' என்றும் அடித்து சொல்லி வருகிறார், மேக்னா ராஜ்.—எலீசாஅஜித்துடன் நடிக்க விரும்பும் விஜய் சேதுபதி!ரஜினி, கமல், விஜய் மற்றும் ஷாருக்கான் போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்த, விஜய் சேதுபதிக்கு, அஜித்துடனும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க முன்பு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால், 'கால்ஷீட்' பிரச்னையால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். அதன் காரணமாகவே, 'அஜித்துடன் வில்லனாக நடிக்க வேண்டுமென்றால், இயக்குனர்கள் என்னை தாராளமாக அணுகலாம்...' என, தகவல் வெளியிட்டுள்ளார், விஜய் சேதுபதி.—சினிமா பொன்னையாகறுப்புப் பூனை!தொடர்ந்து முன்னணி, 'ஹீரோ'களை வைத்து படங்கள் இயக்கி வந்தார், பிரமாண்ட இயக்குனர். இரண்டு படங்களில் அடுத்தடுத்து சறுக்கி விட்டதை அடுத்து, தற்போது அவருக்கு கை துாக்கி விட, எந்த, 'ஹீரோ'வும் முன்வரவில்லை. இவர், 'கதை சொல்ல வருகிறேன்...' என்றாலே, படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதாக, ஏதாவது காரணத்தை சொல்லி தட்டிக் கழிக்கின்றனர்.ஒரு காலத்தில், நாம் எப்போது கதை சொல்வோம் என, காத்துக் கொண்டிருந்த, 'ஹீரோ'கள் எல்லாம், இப்போது தெறித்து ஓடும் காலக் கொடுமையை பார்த்து, கடும் வேதனையில் இருக்கிறார், பிரமாண்டஇயக்குனர். தற்போது, மார்க்கெட்டே இல்லாத ஒரு வாரிசு நடிகரை வைத்து, தன் அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டு வருகிறார்.சினிதுளிகள்!ராம்சரண் நடிப்பில், கேம் சேஞ்சர் படத்தை இயக்கிய ஷங்கர் அடுத்தபடியாக, துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.சல்மான்கான் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும், சிக்கந்தர் என்ற படத்தில், அழுத்தமான குணச்சித்ர வேடத்தில் நடிக்கிறார், சத்யராஜ்.அவ்ளோதான்!