உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

சமந்தா எடுத்த முடிவு!சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு, 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும், அப்படத்தில் நடிக்கும், 'ஹீரோயின்'களுக்கு, ஐந்து கோடி ரூபாய் தான் கொடுப்பர். இதைப் பார்த்து, மேல் தட்டு நடிகையர் பலரும், 'எங்களுக்கும் பெரிய ரசிகர் வட்டம் இருக்கும் போது, நடிகர்களை விட எங்களை குறைத்து மதிப்பிட்டு, ஏன் குறைவாக சம்பளம் தருகிறீர்கள்?' என, கேள்வி எழுப்பி வருகின்றனர்.இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக, தான் தயாரித்து, நடிக்க போகும் புதிய படத்தில் பணியாற்றும், நடிகர் - நடிகையர் என, அனைவருக்கும், சமமான சம்பளத்தை கொடுத்து, திரை உலகில் பாகுபாடு பார்க்கும் மன நிலையை மாற்றும் முயற்சியில் ஈடுபட போகிறார், சமந்தா. — சினிமா பொன்னையா60 வயதில், மூன்றாவது திருமணத்திற்கு தயாராகும், அமீர்கான்!கடந்த, 1986ல், ரீனா தத்தா என்பவரை திருமணம் செய்த பாலிவுட் நடிகர், அமீர்கான், 2002-ல், அவரை விவாகரத்து செய்தார். அதன்பின், 2005ல், கிரண் ராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டவர், 2021ல், அவரையும் விவாகரத்து செய்தார்.தற்போது, 60 வயதாகும் அமீர்கான், பெங்களூரைச் சேர்ந்த, கவுரி என்ற, ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த, 45 வயது பெண்ணை காதலித்து வருகிறார். அவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள போவதாகவும் அறிவித்திருக்கிறார்.— சி.பொ.,தயாரிப்பில் கவனம் செலுத்தும், குஷ்பூ!ஒரு காலத்தில் குஷ்பூவின் நடிப்பிலும், அழகிலும் கிறங்கிப்போன ரசிகர்கள், அவருக்கு கோவில் கட்டினர். ஆனால், அப்படிப்பட்ட குஷ்பூவுக்கு சமீபகாலமாக, சினிமாவில் ஒரு சிறிய வேடம் கொடுக்கக் கூட யாரும் தயாராக இல்லை.இதன் காரணமாகவே, இதுவரை, தன் கணவர் சுந்தர்.சி இயக்கிய படங்களை தயாரித்து வந்த, குஷ்பூ, தற்போது மற்ற இயக்குனர்களின் படங்களையும் தயாரிக்க துவங்கி விட்டார். அதிலும், மெகா பட்ஜெட் படங்களை தவிர்த்து, குறைந்த பட்ஜெட்டில் வித்தியாசமான கதைகளை தயாரிக்க இளவட்ட இயக்குனர்களிடம் தீவிரமாக கதைகள் கேட்டு வருகிறார்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை...அரசியலுக்கு சென்ற தளபதி நடிகரின் இடத்தைப் பிடிக்க, அமரன் நடிகர் முண்டியடித்து வரும் நிலையில், அவரை வீழ்த்தி, அந்த இடத்தை தான் கைப்பற்ற, படு தீவிரம் காட்டி வருகிறார், சுள்ளான் நடிகர்.அதற்காக தளபதி நடிகரை வைத்து, 'ஹிட்' படங்களை கொடுத்த இயக்குனர்களை அணுகி, தன்னை அடுத்த தளபதியாக்கி விடுமாறு கோரிக்கை வைத்து வருகிறார். மேலும், அந்த படங்களில், 'ஆக்ஷன்' மட்டுமின்றி, தளபதி பாணியில், 'பஞ்ச் டயலாக்'குகளையும் பேசி நடித்து, பரபரப்பு கூட்டப் போகிறார், சுள்ளான் நடிகர்.தளபதி இடத்தை கைப்பற்ற தான் திட்டமிட்டு வரும்போது, தனக்கு போட்டியாக சுள்ளானும் குதித்து விட்டதால், கலவரத்தில் இருக்கிறார், அமரன் நடிகர்.சினி துளிகள்!* ஏற்கனவே ஹிந்தியில், மூன்று படங்களில் நடித்துள்ள தனுஷ், தற்போது, மேரே இஷ்க் மெயின் என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், அவருக்கு ஜோடியாக, கிருத்தி சனோன் நடிக்கிறார்.* 'ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்' என்ற சொகுசு காரை, 12 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளார், பாலிவுட் நடிகை, ஊர்வசி ரவுட்டாலா. அதிக தொகை கொண்ட காரை வாங்கிய, முதல் இந்திய நடிகை இவரே.* கூலி படத்தை அடுத்து, ஜெயிலர்- - 2 படத்தில் நடித்து வருகிறார், ரஜினிகாந்த். அதையடுத்து, ஏற்கனவே அவரை வைத்து, பேட்ட படத்தை இயக்கிய, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கப்போகிறார்.* டிராகன் படத்தையடுத்து, பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக, மமிதா பைஜூ, அனு இம்மானுவேல் மற்றும் ஐஸ்வர்யா சர்மா என்ற, மூன்று நடிகையர் நடிக்கின்றனர்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !