உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல....

ராஜமவுலி பாணிக்கு மாறும், அட்லி!அல்லு அர்ஜுன் நடிப்பில், தன் அடுத்த படத்தை இயக்க இருக்கும் அட்லி, அந்த படத்தை, 'சயின்ஸ் பிக்ஷன்' கதையில் உருவாக்கப் போகிறார். இதற்கான, 'விஷுவல் எபெக்டு'க்காக மட்டுமே, 250 கோடி ரூபாய் செலவு செய்ய இருக்கின்றனர். இந்த பணிகளுக்காக ஹாலிவுட்டில் உள்ள, 'டாப்' ஸ்டுடியோக்களில், 'விஷுவல் எபெக்ட்' பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், பாகுபலி இயக்குனர், ராஜமவுலி படங்களுக்கு இணையாக இந்த படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார், அட்லி.—சினிமா பொன்னையா'ஈகோ' பார்க்காத, பூஜா ஹெக்டே!தற்போது, ஜனநாயகன், ரெட்ரோ மற்றும் காஞ்சனா- -- 4 படங்களில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே, படப்பிடிப்பு தளங்களில், இருக்கும் வசதியையே பயன்படுத்திக் கொண்டார். குறிப்பாக, சாதாரணமான, 'கேரவன்' வசதி செய்து கொடுத்தாலோ, ஸ்டார் ஹோட்டல் உணவு இல்லாமல், கையேந்தி பவன் உணவை கொடுத்தால் கூட, மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறார்.இதற்கெல்லாம் மேலாக, இரண்டு, 'ஹீரோயினி சப்ஜெக்டு'களில் நடிக்கும்போது, தன்னை விட, இன்னொரு நடிகைக்கு அதிகமான காட்சிகள் இருந்தால் கூட, அலட்டிக் கொள்வதில்லை.'எனக்கு, நாலு சீன், 'நச்'சென்று இருந்தாலே போதும். அதில், என் திறமையை வெளிப்படுத்தி, 'ஸ்கோர்' பண்ணி விடுவேன்...' என, நம்பிக்கையுடன் சொல்கிறார், பூஜா ஹெக்டே. — எலீசா செக்யூரிட்டிக்கு ஆண்டுக்கு, ரூ.2 கோடி கொடுக்கும், ஐஸ்வர்யா ராய்!பிரபல நடிகை ஐஸ்வர்யாராய், தன் பாதுகாப்புக்காக, இரண்டு பேரை நியமித்திருக்கிறார். படப்பிடிப்பு மட்டுமின்றி, பொது இடங்களுக்கு, ஐஸ்வர்யா ராய் செல்லும் போது, ரசிகர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக, இவர்கள் அவரை நிழல் போல் தொடர்ந்து செல்கின்றனர்.இப்படி தனக்கு முழு பாதுகாப்பு கொடுக்கும், இந்த ரெண்டு நபர்களுக்கும், ஆண்டுக்கு தலா ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கிறார், ஐஸ்வர்யா ராய்.எலீசாரசிகர்களின், 'ரூட்'டுக்கு மாறும், அஜித்குமார்!கடந்த காலங்களில் பல படங்களில், 'சால்ட் அண்டு பெப்பர் கெட்-அப்'பில் நடித்த, அஜித், சமீபத்தில் திரைக்கு வந்த, குட் பேட் அக்லி படத்தில், இளமையான மற்றும் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். இது, அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.தொடர்ந்து இதுபோன்று இளமையான தோற்றத்தில் நடிக்குமாறு, அவருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர், ரசிகர்கள். இதையடுத்து, தன்னை மேலும் இளமையாக வெளிப்படுத்தக் கூடிய கதைகளை உருவாக்குமாறு, அபிமான இயக்குனர்களை கேட்டுக் கொண்டுள்ளார், அஜித் குமார்.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!பெரும்பாலும், உச்ச நடிகர் நடித்த படம் திரைக்கு வருகிறது என்றால், இளவட்ட நடிகர்களின் படங்கள் பின்வாங்கி விடும். ஆனால், தற்போது, உச்ச நடிகரின், இரண்டு எழுத்து படம், ஆகஸ்ட் 14 திரைக்கு வரும் அதே நாளில், பிரபல பாலிவுட் நடிகர் நடித்த படம் ஒன்றும் வெளியாக உள்ளது.தான் நடித்த படத்தை, 1,000 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைத்து விட வேண்டுமென்று, திட்டமிட்டு இருக்கிறார், உச்ச நடிகர். ஆனால், இந்த நேரத்தில் அந்த மெகா பாலிவுட் படத்தின் வெளியீட்டை அறிவித்து விட்டதால், ஒருவேளை தன் 1,000 கோடி ரூபாய் வசூல் கனவுக்கு இந்த படம் சிக்கலை ஏற்படுத்தி விடுமோ என்ற அதிர்ச்சியில் இருக்கிறார், உச்ச நடிகர்.************முன்பெல்லாம் முன்னணி நடிகர்களின் படமாக இருந்தாலும் கூட, 'எனக்கும் கதையில் முக்கியத்துவம் இருக்க வேண்டும்...' என, கூறி வந்தார், தாரா நடிகை.தற்போது, அவரது மார்க்கெட் இறங்கு முகத்தில் இருப்பதால், முன்னணி, 'ஹீரோ'களின் படங்களில் இடம்பெற்றால் தான், தன்னை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதால், தற்போது அவர்களின் படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவும் தயாராகி விட்டார்; சம்பள விவகாரத்திலும் ஓரளவு விட்டுக் கொடுக்கிறார், தாரா நடிகை.சினி துளிகள்!* வேட்டையன் படத்திற்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள, கூலி படம் வருகிற, ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.* கன்னட நடிகர், யஷ் நடிக்கும், டாக்ஸிக் என்ற படத்தில், அவரது அக்கா வேடத்தில் நடித்து வருகிறார், நயன்தாரா.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !